விஜய்க்கு கூடிய கூட்டம்! இவ்ளோ ரசிக வெறி இருக்கும் தமிழ்நாடு வளர்ந்த மாநிலமா? திமுக அனுதாபி கேள்வி
சென்னை: திருச்சியில் விஜய் பிரச்சாரத்திற்காக வந்திருந்த போது அவரை விமான நிலையத்தில் இருந்து மரக்கடை வரை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடியதை பார்க்கும் போது இவர்கள் எல்லாம் அடிப்படை அறிவே இல்லாத ஆட்டு மந்தை கூட்டங்களா என்று திமுகவின் அனுதாபி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பிரச்சார வாகனத்தில் விஜய் ஏறிய போது அங்கு வந்த கூட்டத்தினர் தடுப்புகளை எல்லாம் உடைத்துக் கொண்டு அங்கும் இங்கும் சிதறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. மேலும் அங்கு பலரது ஒற்றை செருப்புகள் சிதறிக் கிடந்தது. பொதுச் சொத்தை சேதப்படுத்துகிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஆட்டுமந்தைகள் போல் ரசிகர்கள் ஓடியது அப்பகுதியில் முகம் சுளிக்க வைத்தது.
இதுகுறித்து திமுகவின் அனுதாபி முனைவர் கணேஷ் என்ற சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு உண்மையாகவே கவலையா இருக்கு. தமிழ்நாட்டில் அடிப்படை அறிவே இல்லாத இத்தனை தற்குறி ஆட்டுமந்தைக் கூட்டமா? நாகரிகக் காலத்தில் தானே வாழறோமா? பிரச்சாரத்துக்கு அங்க தானே வர்றாரு. அப்படியென்ன முண்டியடிச்சி போய் பார்க்க அவசரம்?
இதெல்லாம் வீட்ல பெத்தவங்க, பள்ளிக் கூடத்துல சொல்லிக் கொடுத்து தானே வளர்க்கப்படுறாங்க. ஆனா யாரையும் எதையும் மதிக்காத தறுதலை கூட்டத்திற்கும் திராவிடக் கட்சிகளுக்கும் என்ன தொடர்பு? நீங்க ஒரு ரசிகர் தானே, இப்படி பொதுசொத்தை சேதப்படுத்தி நடிகரைப் பார்க்க ஓடுவீங்களா?
அப்படி ஓடினா வளர்ப்பில் தான் பிரச்சனை இருக்கு. அதுக்கு ஒரு அளவில்லையா? உண்மையாகவே நம்ம குடும்பங்களில், கல்வி நிலையங்களில் நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுத்து தானே குழந்தைகளை வளர்க்கிறோம். பொதுச் சொத்தை சேதப் படுத்துறோங்கிற அறிவு கூடவா இருக்காது?
இரசிக வெறி, குரு பூஜைலாம் பாக்கறப்ப தமிழ்நாட்ல இத்தனை பெரிய காட்டுமிராண்டிக் கூட்டத்த வெச்சிக்கிட்டு தான் வளர்ந்த மாநிலம்னு பெருமை பேசறீங்களானு வடக்கு பக்கம் கேட்டாங்கனா என்ன பதில் சொல்றது? Civic sense ல மட்டும் வளரலங்கய்யானா சொல்ல முடியும்? ஆனா நல்ல வேளை அதுலயும் நம்ம நல்ல ரேங்க்ல தான் இருக்கோம்ங்கறது ஒரு ஆறுதல். இவ்வாறு விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் இன்னொரு ட்வீட்டில் முதல்வர் ஸ்டாலினையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷையும் சேர்த்து டேக் செய்து ட்வீட் போட்டுள்ளார். அதில் சமூக பொறுப்புணர்வு என்பதையும் குடிமக்களின் சமூக பொறுப்பு, சமூகத்தில் நெறிகள் உள்ளிட்டவை குறித்து 1ஆம் வகுப்பில் முதலே கற்றுக் கொடுக்கும் வகையில் பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும். இதற்கு 10 முதல் 20 மதிப்பெண்களையும் கொடுக்கலாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications