இந்த சீட் இவருக்குனு எந்த உறுதியும் இல்ல.. ஜெயிக்கிற ஆள் தான் வேட்பாளர்: ஸ்டாலின் பேசியது என்ன?
சென்னை: யார் வெற்றி பெறுவார்களோ அவர் தான் நமது வேட்பாளராக இருப்பார் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் புனரமைப்பு பணிகள் நடப்பதால், சென்னை தியாகராயர் நகரில் தனியார் ஓட்டலில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள தயாராக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. தங்கள் கட்சியை பலப்படுத்துவதோடு கூட்டணியையும் உறுதி செய்து வருகின்றன. திமுக சார்பில், அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
மண்டல வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். திமுக இளைஞரணி மாநாடு வரும் டிசம்பர் 17ஆம் தேதியன்று சேலத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், இளைஞரணி மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை திமுக தலைமை பார்த்துக் கொள்ளும். யார் வெற்றி பெறுவார்களோ அவர் தான் வேட்பாளராக இருப்பார். இந்தத் தொகுதிக்கு இவர் தான் வேட்பாளர் என்ற உறுதி எதுவுமில்லை. நாம் கை காட்டுபவரே பிரதமராக வேண்டும். 40 தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே அது சாத்தியம்.
மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இனி எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் உள்ள மகளிர் வாக்குகள் நமக்குத்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை. தேர்தல் பணிகளை வேகமாக முன்னெடுத்துச் செல்லுங்கள் என அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பேசிய ஸ்டாலின், இளைஞரணியின் செயலாளராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு இளைஞரணியின் பணிகள் பன்மடங்கு வேகமெடுத்துள்ளன. சேலத்தில் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டை 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பிரமாண்ட மாநாடாக இருக்க வேண்டும். இளைஞர்களை ஈர்க்கும் எஃகு கோட்டையாக திமுக திகழ்கிறது என்பதை இந்த மாநாட்டின் மூலம் நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்த இளைஞரணி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல்












Click it and Unblock the Notifications