சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த "3 பேர்" கன்பார்ம்டு?.. யாரா இருந்தாலும் சரி.. சாட்டையை சுழற்ற போகிறாராம் ஸ்டாலின்!

3 பேருக்கு திமுக அமைச்சரவையில் பதவி நிச்சயம் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக குறித்த ஒரு செய்தி பரபரத்து வருகிறது.. அதன் உண்மை தன்மை என்னவென்று தெரியாவிட்டாலும், இதனால் திமுக தொண்டர்கள் மிகுந்த பூரிப்புடனேயே உள்ளனராம்..!

ரிசல்ட்டுக்காக அனைவருமே காத்து கொண்டுள்ள நிலையில், அதிமுகவும், திமுகவும் பெருத்த நம்பிக்கையில் உள்ளன.. யார் ஜெயிக்க போகிறார்கள் என்று உறுதியாக தெரியாவிட்டாலும், இரு தரப்புமே தங்கள் நம்பிக்கையை கைவிடவில்லை.

அதனால்தான் இரண்டு கட்சிகளுமே ஆளுக்கு ஒரு பக்கம், அமைச்சர்கள் லிஸ்ட்டை தயார் செய்து விட்டதாக கூறுகிறார்கள்.. இதில் திமுகவின் 31 அமைச்சர்கள் பட்டியல் என்று ஒரு டம்மி லிஸ்ட் சோஷியல் மீடியாவில் வெளியான நிலையில், அதிமுக லிஸ்ட் பற்றி எதுவுமே தெரியவில்லை.

 கபசுரக் குடிநீர் விநியோகம்... நிர்வாகிகளிடம் தெரிந்த சுணக்கம்... முன்மாதிரியாக களத்தில் ஸ்டாலின்..! கபசுரக் குடிநீர் விநியோகம்... நிர்வாகிகளிடம் தெரிந்த சுணக்கம்... முன்மாதிரியாக களத்தில் ஸ்டாலின்..!

லிஸ்ட்

லிஸ்ட்

ஆனால், திமுகவின் அமைச்சர்கள் பட்டியலில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற கணிப்பு பலமாகவே வலம் வருகிறது.. அதில் இந்த முறை இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவது என்பதில் திமுக தலைவர் உறுதியாக இருக்கிறாராம்.. அந்த வகையில், 3 பேருக்கு அமைச்சர்கள் போஸ்டிங் உறுதி என்கிறார்கள்.

 3 பேர்

3 பேர்

ஒருவர் உதயநிதி ஸ்டாலின், மற்றொருவர் அன்பில் மகேஷ், இன்னொருவர் டாக்டர் எழிலன் ஆவார்.. இவர்கள் 3 பேருமே ஜூனியர்கள்தான்.. 3 பேருமே வாரிசுகள்தான்.. எனவே இந்த 3 பேருமே அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

 உதயநிதி

உதயநிதி

உதயநிதிக்கு சீட் தந்ததால், ஏற்கனவே திமுக சீனியர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், இப்போது இவர்கள் 3 பேருக்குமே அமைச்சர் பதவி என்றால், பெருத்த பொருமல் திமுகவில் இருந்து சீனியர்களிடம் எழவே செய்யும் என்றாலும், இந்த 3 இளைஞர்கள் பலம் பொருந்தியவர்கள் என்பதையும் திமுகவின் பெரும்பான்மையோர் மறுப்பதற்கில்லை.

 கறார் தன்மை

கறார் தன்மை

இதுவரை இருந்த திமுகவின் பாணியே இந்த முறை தகர்த்தெறியப்படும் என்கிறார்கள்.. அப்படி ஒரு கண்டிப்பு, கறார் தன்மையுடன் ஸ்டாலின் தன்னுடைய அமைச்சரவையை வைத்திருக்க முடிவு செய்துள்ளாராம்.. இந்த விஷயத்தில் ஸ்டாலின் சரியாகவே யோசித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. முன்பெல்லாம் திமுக அமைச்சர்கள் என்றால், அந்த ஆட்சி முடியும்வரை இவர்கள்தான் இருப்பார்கள்.. 5 வருடத்தில் இவர்களை கருணாநிதி மாற்றவே மாட்டார்.. புகார்கள் வந்தாலும் கூப்பிட்டு கண்டித்து எச்சரிப்பாரே தவிர, ஜெயலலிதா போல ஓவர்நைட்டில் பதவியை பிடுங்க மாட்டார்.

 கண்டிப்பு

கண்டிப்பு

இப்போது திமுகவில் நிலைமை அப்படி இல்லை.. சற்று கண்டிப்பு தேவைப்படுகிறது.. மக்களும் விழிப்புடன் உள்ளனர்.. அதனால், யார் மீது புகார் வந்தாலும், சாட்டையை சுழட்ட போகிறாராம் ஸ்டாலின்.. இதன்மூலம், திமுக மீதான புகார்கள் இனி குறையும், அனைவரும் பயந்து இனி மக்களுக்காக வேலை பார்ப்பார்கள் என்று நம்பப்படுகிறதாம். இப்படியெல்லாம் பரபர தகவல்கள் வந்து கொண்டிருந்தாலும், மொதல்ல ரிசல்ட் வரட்டும், பிறகு பார்க்கலாம் என்ற குரல்களும் சேர்ந்தே எழுகின்றன..!

English summary
DMK: Three including Udhayanidhi Stalin will get the ministerial post, say Sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X