ஒரே நாடு ஒரே தேர்தல்.. சல்லி சல்லியா நொறுக்கிய திமுக! மத்திய அரசு இதை எப்படி சமாளிக்கப்போகுதோ?
சென்னை: சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்து உள்ளார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்க இருக்கும் சிறப்புக் கூட்டத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், "கட்டாயமாக இது முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவுக்கு பொருத்தமற்றது. 1996 ஆம் ஆண்டு ஒரு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 1998 ஆம் ஆண்டு இன்னொரு தேர்தல் நடைபெற்றது.
1999 ஆம் ஆண்டு மூன்றாவது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போதெல்லாம் மாநிலங்களில் ஆட்சியை கலைத்துவிட்டு, அதோடு தேர்தலை நடத்துவதாக சொல்வதே தவறு. அப்படி நடத்த முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் நாடாளுமன்றத்துக்கும் அனைத்து சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்ற கனவிலே அவர்கள் அதை சொல்கிறார்கள். அதற்கு வாய்ப்பு இல்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் 5 ஆண்டு காலம் ஆட்சி இருக்க வேண்டும். மக்கள் வாக்களிப்பது 5 ஆண்டு ஒருவர் ஆட்சியில் இருப்பதற்காகதான். அதை மீறி நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதோ, அல்லது ஒரு மாநிலத்துக்கு தேர்தல் வரும்போதோ மற்ற மாநிலங்களில் எல்லாம் ஆட்சியை கலைத்துவிட்டு எப்படி தேர்தல் நடத்த முடியும்? நாடு ஒரே தேர்தல்.. சல்லி சல்லியா
இந்த சிந்தனையே தவறானது. இதற்கு அரசியலமைப்பு சட்டமும் இடம் கொடுக்காது. மக்களும் இடம்கொடுக்க மாட்டார்கள். அதை புரிந்துகொள்ளாமல் இவர்கள் பேசுகிறார்கள் என்றாலும் அந்த சட்டத்திற்கு முன்னால், அந்த சட்டத்தை எப்படி நிறைவேற்றுவது, நடைமுறைப்படுத்துவது என்றால் அரசியலமைப்பு சட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
இந்த மாற்றங்கள் எல்லாம் வெற்றிபெறுமா? மாநிலங்களவையில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். அந்த எண்ணிக்கையை எல்லாம் பார்த்துவிட்டுதான் சொல்ல முடியும்." என்றார்.
-
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications