காங். 15; இடதுசாரிகள் 9; மதிமுக- 2; விசிக- 2; மு.லீக்-2.. கறாராகவே சொன்ன திமுக.. கலகம் பிறக்குமோ?
சென்னை: சட்டசபை தேர்தலில் வலிமையான கூட்டணியாக இருந்து வரும் திமுக அணியில் தொகுதி பங்கீடு விவகாரம்தான் மிக பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.
சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி உறுதி என்கிற பெரியண்ணன் மனோபாவத்தில் திமுக இருக்கிறது. மக்கள் கிராமசபை கூட்டங்களை நடத்தி வந்த திமுக தலைவர் ஸ்டாலின், இப்போது முதல்வர் என்கிற தோரணையிலேயே பேசிவருகிறார்.

இந்த ஓவர் கான்பிடன்ஸ் அணுகுமுறையை அப்படியே கூட்டணி கட்சிகளிடம் திமுக காட்டி வருகிறது. திமுக ஆட்சியில் அமையும்; நமது கட்சியிலும் சில பல எம்.எல்.ஏக்கள் உருவாக வாய்ப்பு கிடைத்துவிட்டது என நினைத்து கொண்டிருந்த அத்தனை கூட்டணி கட்சிகளின் கனவிலும் லாரி லாரியாக மண்ணை அள்ளி போட்டு வருகிறது திமுக.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் தொடக்கம் முதலே தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஒருவித கமுக்கத்துடன் இருந்து வருகிறது. இருந்தபோதும் குறைந்தபட்சம் 25 தொகுதிகளாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என நம்பிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் திமுக தரப்பு மிக அதிகபட்சமாக 15 தொகுதிகள்தான் தர முடியும் என கூறிவிட்டது.
திமுகவின் இந்த போக்கை ஏற்றுக் கொள்வதா? இல்லையா என தெரியாமல் தமிழக காங்கிரஸ் முழித்துக் கொண்டிருக்கிறது. இத்தகவல் டெல்லிக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கிறது. வரும் 14-ந் தேதி தமிழகம் வருகை தரும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான ஆலோசனைக்குப் பின் காங்கிரஸ் கட்சி இறுதிகட்ட முடிவை எடுக்க வாய்ப்பிருக்கிறது.
இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் சிபிஎம், சிபிஐ இரண்டுமே தலா 15 சீட் கேட்டிருக்கின்றன. ஆனால் சிபிஎம் கட்சிக்கு 5; சிபிஐக்கு 4 என மொத்தம் 9 இடங்கள்தான் இம்முறை என திமுக சொல்லிவிட்டதாம். இவ்வளவு குறைவான தொகுதிகள எப்படி நாங்கள் ஏற்க முடியும்? என ஜெர்க் ஆகியிருக்கின்றனர் தோழர்கள். லோக்சபா தேர்தலில் நாங்கல் தாராளமாக சீட் கொடுத்ததையும் நினைத்து பாருங்கள் என ஹிண்ட் கொடுத்திருக்கிறதாம் திமுக.
மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தலா 2 சீட் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் அதிருப்தியில்தான் உள்ளனர். ஆனாலும் இதுவரை கூட்டணியை விட்டு வெளியேறுவதில்லை என்பதிலும் உறுதியாக உள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில் 2 இடங்கள் என சொல்லப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுகவுக்கு அலை சாதகமாக இருக்கலாம் என்பதாலேயே இதுவரை இந்த கறார் தொகுதி ஒதுக்கீட்டை விமர்சிக்காமலேயே இருக்கின்றனவாம் கூட்டணி கட்சிகள்.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications