Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுடன் கூட்டா? இப்போ பாருங்க... எடப்பாடியின் அஸ்திவாரத்தில் கை வைத்த திமுக.. பிரம்மாஸ்திரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி உருவாகியுள்ள சூழலில், எடப்பாடிக்கு எதிரான கோடநாடு வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொடநாடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது புகார்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில்தான் அதில் விசாரணையை தீவிரப்படுத்த ஆளும் திமுக முடிவு செய்துள்ளதாம். இதில் இத்தனை காலம் எடப்பாடிக்கு எதிராக திமுக கொஞ்சம் கரிசனை காட்டியதாம். அதிமுகவை காலி செய்தால்.. பாஜக உள்ளே வரும் என்று திமுக நினைத்ததாம். ஆனால் இப்போது பாஜக ஆட்சியும் முடிவிற்கு வரும் என்று திமுக நம்புவதால்.,. எடப்பாடியையும் வீழ்த்த திமுக முடிவு செய்துள்ளதாம்.

விசாரணை தீவிரம்

விசாரணையின் ஒரு கட்டமாக, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், அதிமுக ஆட்சியில் அதிகார மையத்தோடு நெருக்கமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் பெருமாள் சாமி, ராஜா, வீரபெருமாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், சசிகலாவிடமும் விசாரணை நடத்தியது சி.பி.சி.ஐ.டி.

DMK to speed up the investigation on the AIADMK Edappadi Palanisamy Kodanadu Case

இந்த நிலையில், சசிகலாவின் அண்ணி இளவரசி, எடப்பாடியின் வலதுகரமான சேலம் இளங்கோவன் ஆகியோரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் திட்டமிட்டுள்ளதாம். விரைவில் இவர்களுக்கு சம்மன் அனுப்பப்படவிருக்கிறதாம். இவர்களிடம் விசாரித்து விட்டு, இறுதியில் எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அனேகமாக இந்த விசாரணை ஆகஸ்ட் 15-க்கு முன்னதாக நடக்கலாம்'' என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

கோடநாடு வழக்கு பின்னணி

ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். அதன்பின் கொள்ளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த கோடநாடு மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை பற்றி தமிழ்நாடு போலீஸ் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது.

இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்திற்கு பின் சரியாக 4 நாட்கள் கழித்து கொள்ளையில் ஈடுப்பட்ட கனகராஜ் விபத்து ஒன்றில் மர்மமாக மரணம் அடைந்தார். இவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். அதேபோல் இன்னொரு முக்கிய குற்றவாளி சயான் குடும்பத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர். இதில் சயான் நூலிழையில் உயிர் தப்பினார்.

எடப்பாடி மீது நேரடி குற்றச்சாட்டு: இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இப்படி வழக்கில் போகஸ் எடப்பாடி பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில்தான் வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகார் மேல் புகார்

கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் அளித்த பரபரப்பு பேட்டிதான் இப்போது எழுந்துள்ள பரபரப்பிற்கு காரணம் என்கிறார்கள் அதிமுகவில் விவரம் அறிந்தவர்கள், எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை.. எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.,

கோடநாடு பங்களாவில் இருந்து எனது தம்பி கனகராஜ் 5 பெரிய பைகளை எடுத்து வந்தார்; அதன் உள்ளே ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன; எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில் எடுத்து வந்ததாக என்னிடம் தெரிவித்தார். கனகராஜ் உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது வழக்கில் பெரிய திருப்பத்தை அவருக்கு எதிராக ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+