தமிழ்நாடு தலைகுனியாது; ஸ்டாலின் ஹெலிகாப்டர் ஷாட்.. 234 தொகுதிகளிலும் இன்று முதல் திமுக பிரச்சாரம்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொரு மண்டலத்திலும் தொடங்கி பூத் வாரியாக வரை பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு தலைகுனியாது என்கிற தலைப்பில் இன்று முதல் பிரச்சார கூட்டங்களை தொடங்கி நடத்தவுள்ளனர்.
சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்ட தொடங்கியுள்ளனர். திமுக சார்பில் மண்டல வாரியாக இளைஞரணி மற்றும் மகளிரணி கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
பூத் வாரியாகவும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாத இறுதியில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திமுக டாப் கியர் போட்டு பறக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு தலைகுனியாது என்கிற பெயரில் பிப்ரவரி 1 ஆம் தேதியான இன்று முதல் தொகுதி வாரியாக பிரச்சார கூட்டங்களை திமுக நடத்துகிறது.
பிப்ரவரி இறுதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பிரச்சார கூட்டங்களை நடத்துவதுதான் இதன் திட்டம். முதலமைச்சர் ஸ்டாலினால் தேர்வு செய்யப்பட்ட 23 நட்சத்திரப் பேச்சாளர்கள் 234 தொகுதிகளிலும் பயணித்து இந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது அந்தந்த தொகுதிக்குட்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைக்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருச்சி சிவா, ஜெகத் ரட்சகன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எழிலன் நாகநாதன், ராஜ கண்ணப்பன், திண்டுக்கல் லியோனி, தமிழச்சி தங்க பாண்டியன், தயாநிதி மாறன், கார்த்திகேய சிவசேனாபதி, கலாநிதி வீராசாமி அந்தியூர் செல்வராஜ், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் நட்சத்திர பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல் நாளான இன்று திருப்போரூர், ராயபுரம், கோவை தெற்கு, நிலக்கோட்டை, கிருஷ்ணராயபுரம், திருவள்ளூர், சாத்தூர் தொகுதிகளில் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து இந்த மாதத்தின் 28 நாட்களும் பிரச்சாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 23 பேச்சாளர்கள்.. 28 நாட்கள்.. 234 தொகுதிகள் என்கிற டார்கெட்டுடன் களமிறங்குகிறார்கள்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications