தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது? அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன், மருமகன் பதவிகளை பறித்த திமுக
சென்னை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியார் அலி மஸ்தான், மருமகன் ரிஸ்வான் ஆகியோரின் கட்சி பதவிகளை திமுக தலைமை பறித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியான செய்தியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுஅணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட ரிஸ்வான் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

அவருக்கு பதிலாக பள்ளியம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஷேக்வாகித் நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஷேக்வாகித்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான உத்தரவை திமுக விளையாட்டு அணி மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்பி அறிவித்துள்ளார்.
அது போல் விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.எம். மொக்தியார் அலி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக பெரும்புகை கிராமத்தை சேர்ந்த ரோமியன் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும் அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார்.
பின்னணி என்ன? விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருந்து வருகிறார். அமைச்சராக பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது மாற்றுக் கட்சியில் இருந்து வந்தோருக்கு சீட் கொடுக்கப்பட்டது. பெரும்பாலான பொறுப்புகள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கே மஸ்தான் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சாராய வியாபாரி மரூர் ராஜாவுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த மாதம் திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து நகர்மன்றக் கூட்டத்திலிருந்து 13 திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அது மட்டுமல்லாமல் அமைச்சர் மஸ்தான் குறித்து திமுக தலைமைக்கு அந்த 13 கவுன்சிலர்களும் புகார் அளித்துவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றக் கூட்டம் நடந்தது. அப்போது 7ஆவது வார்டை சேர்ந்த திமுக கவுன்சிலர் புனிதா, தனது வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்திருந்தார்.
நகர்மன்றக் கூட்டத்தில் பேசிய திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் 13 பேரும் தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்யவில்லை. அதனால் பொதுமக்கள் மத்தியில் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. முதல்வர் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நகர்மன்றம் செயல்படுகிறது.
இதனால் நாங்கள் எங்கள் ராஜினாமா கடிதத்தை 13 பேரும் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்க போகிறோம் என கூறினர். இதையடுத்து அவர்கள் ராஜினாமா கடிதத்தை உயர்த்தி காட்டிவிட்டு வெளியேறிவிட்டனர். இந்த நிலையில் வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில் நாங்கள் கவுன்சிலர்களாக பதவி ஏற்று 18 மாதங்கள் ஆகின்றன. நகராட்சி எங்கள் வார்டுகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. நாங்கள் ஏதாவது கேட்டால் அமைச்சர் மஸ்தானின் மருமகன் ரிஸ்வானை கேளுங்கள் என்கிறார்கள். இவருடைய தலையீடு அதிகமாக இருக்கிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது செஞ்சி பேரூராட்சியில் தனது மகன் மொக்தியார் அலி மஸ்தானை களமிறக்கி ஜெயிக்க வைத்தார் அமைச்சர். இதனால் அவர் செஞ்சி பேரூராட்சி தலைவராக உள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராகவும் மொக்தியார் அலி மஸ்தான் உள்ளார்.
மேலும் அமைச்சர் மஸ்தானுக்கு உதவியாளராக இருந்து வரும் மருமகன் ரிஸ்வான் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். அமைச்சரின் குடும்பத்தினரே கட்சி பொறுப்புகளில் இருந்து வருவதால் கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஏற்கெனவே பால்வளத் துறை அமைச்சராக இருந்த நாசரின் மகன் பதவி பறிக்கப்பட்டது, பிறகு அவரது செயல்பாட்டுக்காக அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். அது போல் செஞ்சி மஸ்தான் மீது புகார்கள் குவிந்ததால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது போல் அவரது மகன், மருமகன் பதவிகள் பறிக்கப்பட்டன.
-
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications