"லூஸ்-டாக் வேண்டாம்".. ஸ்டாலின் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்- பிடிஆருக்கு திமுக மேலிடம் அறிவுரை?!
சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு வரும் ட்வீட்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு இவர் பதில் அளிக்கும் விதம் வைரல் ஆனாலும், சில ட்வீட்கள் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த வாரம் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு சார்பாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அழைப்பு சென்று இருந்தது. ஆனால் மற்ற அலுவல் விஷயங்களையும், கடைசி நேரத்தில் அழைப்பு வந்ததையும் காரணம் காட்டி, அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் பிடிஆர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாததை சிலர் விமர்சனம் செய்து இருந்தனர். இவர் தனது கொழுந்தியாளின் வளைகாப்பிற்கு செல்ல வேண்டும் என்று லீவ் எடுத்துவிட்டார். பூப்புனித நீராட்டு விழாவிற்கு செல்ல வேண்டும் என்பதற்காக இவர் அந்த கவுன்சில் கூட்டத்திற்கு செல்லவில்லை, முதல்வர் ஸ்டாலின் இவருக்கு சிறப்பு விமானம் தரவில்லை என்பதால் கூட்டத்திற்கு செல்லவில்லை என்று சிலர் வதந்திகளை பரப்பி பிடிஆருக்கு எதிராக ட்வீட் செய்து வந்தனர்.

பிடிஆர்
இதற்கு எல்லாம் பிடிஆர் காட்டமாக பதிலடி தந்து வந்தார். கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் தெரிவிக்கிறார்கள். நான் ஏற்கனவே நிறைய நிகழ்ச்சிகளுக்கு வருவதாக நேரம் ஒதுக்கிட்டேன். அதனால் என்னால் செல்ல இயலவில்லை எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும் பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா, என்று கடுமையாக பதில் அளித்து இருந்தார். இன்னொரு பக்கம் பிடிஆரை விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக அண்ணாமலை ஆகியோரையும் பிடிஆர் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

வரம்பு மீறல்
பிடிஆர் வெளியிட்ட பல ட்வீட்கள் எதிர் தரப்பை விமர்சிக்கும் வகையில் இருந்தாலும், வேறு சில ட்வீட்கள் கொஞ்சம் வரம்பு மீறி இருந்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. முக்கியமாக எதிர்கட்சித்கட்சித் தலைவர் ஒருவரை மனநல நோய் கொண்டவராக பிடிஆர் விமர்சனம் செய்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிறம் சொல்லி கிண்டல் செய்வதும், உடல் குறைபாடுகளை சொல்லி கிண்டல் செய்வதும் எப்படி தவறோ அதே போல் ஒருவரை மன நல நோய் பாதிக்கப்பட்டவராக விமர்சனம் செய்வதும் தவறு. நாகரீக சமூகத்தில் இதை வைத்து காமெடி செய்வதோ விமர்சனம் செய்வதோ சரியாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
Recommended Video

காமெடி
இந்த நிலையில்தான் மன நலன் குறித்து பிடிஆர் ட்வீட் செய்தது சர்ச்சையாகி இருக்கிறது. இவர் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக ஜிஎஸ்டி கூட்டம் குறித்து கோபமாக ட்வீட் செய்து வரும் நிலையில், திமுக தரப்பிலேயே சிலர் பிடிஆரின் கோபமாக பதில்களுக்கு எதிராக பேசி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றன. பிடிஆர் கோபம் நியாயம்தான், ஆனால் அதை கொஞ்சம் குறைவாக வெளிப்படுத்த வேண்டும். இப்படி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக பேசுவது நல்ல தோற்றத்தை கொடுக்காது என்று திமுகவிற்கு உள்ளேயே சில தலைவர்கள் கருதுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்ப்பு
திமுக மூத்த உறுப்பினரும், ராஜ்ய சபா எம்பியுமான டிகேஎஸ் இளங்கோவன் பிடிஆரின் சமீபத்திய ட்வீட்கள் குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதில், பிடிஆர் எளிதில் கோபப்பட கூடிய நபர். அவர் தானாக யாரிடமும் சென்று சண்டை போடும் நபர் கிடையாது. தேவையின்றி யாரிடமும் கோபப்படும் நபர் கிடையாது. ஆனால் அவருக்கு எதிராக யாராவது முறையின்றி கருத்து கூறினால் பிடிஆர் உடனே கோபம் அடைவார். பிடிஆர் உடனே இதற்கு எதிராக கடுமையான சில பிரயோகங்களை பயன்படுத்துவார்.

கோபம் தவறு
அவர் தன்னை கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நானும் அவரிடம் அதைத்தான் சொல்லி இருக்கிறேன். ஒரு அரசியல் தலைவர் கொஞ்சம் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று அவரிடம் சொல்லி இருக்கிறேன். எதிர்கட்சித் தலைவர்கள் இப்படித்தான் செய்வார்கள். நீங்கள் அதை கண்டுகொள்ள வேண்டாம். மக்கள் நம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் தேவையின்றி கோபப்பட கூடாது என்று அவரிடம் கூறி இருக்கிறேன்.

கட்டுப்பாடு வேண்டும்
தமிழ்நாடு முதல்வரும் கட்சித் தலைவருமான ஸ்டாலின் அனைத்தையும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார். முதல்வர் பிடிஆரிடம் பேசி இருப்பார் என்றே நான் நினைக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் எல்லோரையும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார். முக்கியமாக அமைச்சர்களை கண்காணித்துக்கொண்டு இருக்கிறார். அமைச்சர்கள் பேசும் லூஸ் டாக் விஷயங்கள் எதுவும் மக்களிடம் தவறாக சென்று சேர்ந்து விட கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

ஸ்டாலின் வாட்சிங்
முதல்வர் எல்லோருக்கும் அறிவுரை வழங்கி வருகிறார். லூஸ் டாக் காரணமாக என்னென்னெ பிரச்சனை வரும் என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். ஏற்கனவே ஒரு முறை முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக பிடிஆருக்கு அறிவுரை வழங்கி இருந்ததாக கேள்வி பட்டேன். அவர் மேலும் இது தொடர்பாக அறிவுரைகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். வார்த்தைகளை அப்படியே பயன்படுத்திவிட கூடாது.

அறிவுரை
பிடிஆர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். இது தொடர்பாக அவருக்கு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. அவர் இது தொடர்பான முறையான விளக்கத்தை வாங்கிவிட்டார். கவுன்சில் கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என்ற குறிப்பையும் அவர் வழங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, என்று திமுக மூத்த உறுப்பினரும், ராஜ்ய சபா எம்பியுமான டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications