விஜயை விடாமல் அடிக்கும்.. திமுகவின் டாப் அமைச்சர்கள்.. மொத்த போகஸும் திரும்பிடுச்சே.. கவனிச்சீங்களா!
சென்னை: தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை தொடக்கத்தில் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்த திமுகவின் மூத்த தலைவர்கள் தற்போது விஜயை நேரடியாக பெயர் சொல்லி தாக்கி வருகின்றனர். தொடக்கத்தில் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கிய திமுகவின் மூத்த தலைவர்கள் தற்போது விஜய் நேரடியாக தாக்கு பேசி வருகின்றனர்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு மக்கள் நலன் செய்ய வேண்டும் என இப்போதுதான் அறிவு வந்ததா ? அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் எங்கே வைத்திருக்கிறார் அந்தப் பணத்தில் மக்கள் நலன் என ஏதாவது செய்திருக்கிறாரா என அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளார்கள் அது மட்டுமல்லாமல் நாளை அண்ணா பிறந்த நாளை ஒட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடி முன்பும் உறுதிமொழி ஏற்கக்கூடிய நிகழ்வு நடைபெற உள்ளதாக கூறினார்.
தவெக மீது தாக்குதல்
விஜய் திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் வாக்குறுதி என்பது மக்களுக்கு பல்வேறு வகையில் நன்மை செய்ய வேண்டும் எதையெல்லாம் செய்ய வேண்டும், செய்யலாமென வாக்குறுதி கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடாது என்பதற்காக இந்த நிதியை கொடுத்தால் வாக்குறுதி நிறைவேற்றி விடுவார்கள் என ஒன்றிய அரசாங்கம் தமிழகத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அளவிற்கு எந்த வகையில் நிதியாதாரங்களை கொடுக்க முடியாமல் தடை செய்கின்ற வகையில் செய்கிறார்களோ அதை விஜய் அவர்கள் புரிந்து பேசுகிறாரா இல்லையா என தெரியவில்லை விஜய் கேட்கின்றார் என்று சொன்னால் விஜய் இதுவரை இந்த தமிழகத்தின் மக்களுக்கு தமிழ்நாட்டுடைய இளைஞர்களுக்கு தமிழ்நாட்டின் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களுக்கு எவர்களுக்காவது எந்த உதவியாவது செய்திருக்கிறாரா என கேள்வி எழுப்பி அமைச்சர்.
விஜய் நடிகராக இருக்கும் போது 200 முதல் 300 கோடி ரூபாய் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குகின்ற நடிகர் எந்த செயலாவது மக்களுக்காக செய்திருக்கிறாரா இல்லை. எதுவும் செய்யாமல் கேள்வி கேட்பது எளிது எனக் கூறிய அவர் முதலமைச்சர் மக்களுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் செய்வதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் எனக் கூறினார்.
பாஜக அரசு எத்தனை இடைஞ்சல்கள் செய்தாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்போடு முதலமைச்சர் செயல் பட்டு வருகிறார்கள் மக்களை நம்பி தான் நாங்களும் எங்கள் இயக்கமும் இருக்கிறது மக்களை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம் கொடுத்த வாக்குறுதிகளை எங்களுடைய கழகத் தலைவர் தமிழக முதலமைச்சர் அத்தனை நிறைவேற்றி தருவார்கள் என்றார் மேலும்
விஜய் - திமுகவை தான் பற்றி பேசுவார்கள்
யார் கட்சியை ஆரம்பித்தாலும் திமுகவை தான் பற்றி பேசுவார்கள் ஏனென்றால் திமுக தான் மக்கள் மன்றத்தில் இருக்கக்கூடிய இயக்கம் மக்களை நேசிக்கக்கூடிய இயக்கம் திமுக இயக்கம் அதனால் தான் சாதாரணமொருவர் கட்சி ஆரம்பித்தால் திமுகவை வீழ்த்தப் போகிறேன் என்கிறார்கள் திமுக பாரம்பரியமானது அண்ணாவின் காலத்தில் இருந்து தலைவர் கலைஞர் காலத்தில் இருந்து நம்முடைய முதலமைச்சர் தளபதியுடைய காலத்தில் இருந்து அத்தனையும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் சிறுபான்மை மக்கள் ஒவ்வொருவருடைய உயர்வுக்காக இருக்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே என்னவென்று சொன்னால் எவரெல்லாம் அமுங்கி இருக்கின்றார்களோ எவரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் உயர்வு வரவேண்டும் என்ற வகையில் இருக்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழக இயக்கம் அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த கொம்பனும் தொடவும் முடியாது அசைக்கவும் முடியாது என ஆவேசத்துடன் தெரிவித்தார்.
விஜய் சினிமா - திமுக
சினிமாவில் நடிப்பவர் கூட்டத்தை நடத்தலாம் எந்த வகையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைக்க முடியாது வெல்வோம் 2026 இல் கழகத் தலைவர் தளபதியார் முதலமைச்சர் அமர வைப்போம் என்றார்
மேலும் எம்ஜிஆர் அண்ணாவோட இருந்தவர் கலைஞரோடு இருந்தவர் மக்களோடு மக்களாக இருந்தவர் தான் சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்கு வழங்கியவர் இவர் யார் விஜய் யார் இவர் என்ன செய்திருக்கிறார் என ஒன்றைச் சொல்லுங்கள் 200 கோடி 300 கோடி சம்பாதிக்கக்கூடிய நடிகர் என்றார்.
தூத்துக்குடிக்கு வரும் விஜய்க்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு
மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் விஜய்க்கு மக்கள் திமுக பக்கம் தான் இருக்கிறார்கள். என்றார்
அமைச்சர் கீதா ஜீவன் - திமுக
விஜய் கட்சியில் கட்டுப்பாடு இல்லை, கண்ணியம் இல்லை. தலைமை கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் வரையறை இல்லாமல் இருக்கிறது என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி, எட்டயபுரம் சாலையில் உள்ள திமுக வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில், அண்ணா 117வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய மூன்று சட்டமன்றத்தில் உள்ள 830 பூத்-களில் தமிழ்நாட்டை தலைகுனியே விடமாட்டோம் என்ற முன்னெடுப்பின் மூலம் உறுதிமொழி எடுக்க உள்ளோம். கரூரில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. ஆகவே, 2026இல் தமிழக முதல்வரை மீண்டும் முதல்வராக வெற்றி பெற வைக்கும் முப்பெரும் விழாவாக அது அமையும்.
தேர்தல் வாக்குறுதிகளை பாஜக அதிமுக, அவர்கள் இதற்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளை எடுத்துப் பார்க்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதிகளில் கூறாததை கூட செய்து வருகின்றோம். திமுக 80 சதவீதத்திற்கும் மேலாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக குற்றம் சாற்றுவார்கள்.
பல்வேறு திட்டத்தின் மூலம் தொழில், பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன் பெற்று நலன் அடைந்து வருகின்றார்கள். நிச்சயமாக மக்கள் ஆதரவோடு திராவிட முன்னேற்றக் கழகம் 2026இல் ஆட்சி பொறுப்பு ஏற்கும். திமுக-விற்கு எதிராக எத்தனை எதிர்க்கட்சிகள் இருந்தாலும் நாங்கள்தான் உறுதியாக வெற்றி பெறுவோம்.
விஜய் கட்சியில் கட்டுப்பாடு இல்லை கண்ணியம் இல்லை. தலைமை கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் வரையறை இல்லாமல் இருக்கிறது.. விரைவில் அவர்கள் கற்று கொள்வார்கள் என்றார்.
அன்பில் மகேஷ் அட்டாக் - விஜய்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "விஜய் பேசியதை நான் இன்னும் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை. விஜய் வருகையின்போது கூட்டம் அதிகளவில் வந்திருப்பதாக சொன்னார்கள். அதை பார்த்துவிட்டு என்னுடைய கருத்தை சொல்கிறேன். கூட்டமாக அவரை பார்க்க வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் வேடிக்கை பார்க்க வருகிறார்கள். தவெக கூட்டத்திற்கு சென்ற அந்த தம்பிகள் வீட்டில் அரசின் பயனாளிகளாக தான் இருப்பார்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் தமிழ் புதல்வன் திட்டம் மூலமாகவோ, மகளிர் உதவித் தொகை மூலமாகவோ, காலை உணவுத் திட்டம் மூலமாகவும், மகளிர் பேருந்து திட்டம் மூலமாகவும் அவர்கள் குடும்பத்தினர் மொத்தமாக பயனடைந்திருப்பார்கள். அதன் காரணமாக தேர்தலின்போது அவர்கள் எங்களுக்கு ஆதரவாக தான் இருப்பார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதைத்தான் திராவிட மடல் அரசு செய்து கொண்டிருக்கிறது. அந்தப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்." என்றார்.












Click it and Unblock the Notifications