மொத்தமே ’29 பைசா’ தான்.. நிதியை வைத்தே பொளந்து கட்டும் உதயநிதி..! ஓ இப்படித் தான் கண்டுபிடிச்சாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் 1 ரூபாய் வரி கட்டினால், நமக்கு 29 பைசா கொடுக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் கொடுக்கிறார்கள். அதனால்தான் அவருக்கு 29 பைசா மோடி என பெயர் வைத்துள்ளேன் என 29 பைசாவைக் காட்டி பிரசாரம் செய்யும் உதயநிதியின் யுக்தி எளிய மக்களுக்கும் புரியும் வகையில் இருப்பதாகக் கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு பிரச்சார யுக்திகளை யோசித்து யோசித்து செய்து வருகின்றனர்.

DMK Udayanidhi Stalin s campaign on 29 Paisa issue is the reason for success

கடந்த காலங்களில் பிரச்சார யுக்தி என்பது மாட்டு வண்டியிலும் போஸ்டர் ஒட்டியும் பிரசாரத்தில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஒரே ஒரு புகைப்படத்தை வைத்து நூற்றுக்கணக்கான வாக்குகளை பெற்று விடலாம் என்பது சாத்தியமே.

வித்தியாச பிரசாரம்: இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட வேட்பாளர்கள் பிரச்சார களங்களில் பல வகையான யுக்திகளை கையாண்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். சைக்கிள் ஓட்டுவது, மாட்டு வண்டி ஓட்டுவது, வடை சுடுவது, டீ போட்டுக் கொடுப்பது, இஸ்திரி போடுவது என தங்களால் என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு இறங்கி வாக்காளர்களை கவர முயற்சி செய்து வருகின்றனர் . இதற்கு தலைவர்களும் விதிவிலக்கல்ல. அப்படி ஒரு பிரச்சார யுக்தியை தான் கையில் எடுத்திருக்கிறார் திமுக இளைஞரணி தலைவரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின்: மத்திய அரசு நிதிப் பகிர்வில் தமிழகத்தை புறக்கணிப்பதாக நீண்ட காலமாகவே புகார் கூறி வருகிறது திமுக. அந்த புகாரையே தனது பிரச்சார யுக்தியாக மாற்றி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தான் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், " பிரதமர் மோடிக்கு 29 பைசா என நான் பெயர் வைத்திருக்கிறேன். அதற்கு காரணம் தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டி வரி கட்டுகிறோம். மத்திய அரசு அதை வாங்கி பிரித்து அனைவருக்கும் சமமாக தானே தரவேண்டும்.

29 பைசா: தமிழ்நாட்டில் ஒரு ரூபாயை வரியாக வாங்கும் மத்திய அரசு வெரும் 29 காசுகளை தான் தருகிறது. ஆனால் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு ரூபாய் ஜிஎஸ்டி கட்டினால் மூன்று ரூபாயாக திரும்பி கிடைக்கிறது. மத்திய அரசு பீகார் மாநிலத்தில் ஒரு ரூபாய் கொடுத்தால் ஏழு ரூபாயை திருப்பிக் கொடுக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு அக்கறையில்லை ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் 29 பைசா வழங்குவதால் தான் அவ்வாறு கூறுவதாக கூறி வருகிறார் உதயநிதி. அவரின் இந்த பிரச்சார யுத்தி கை கொடுத்திருப்பதாகவே கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.

DMK Udayanidhi Stalin s campaign on 29 Paisa issue is the reason for success

சாமானியர்களுக்கும் புரியும்: பொருளாதார அடிப்படையில் ஒரு மிகப்பெரிய விஷயத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினம் . அதை மக்கள் புரிந்து கொள்வதும் சிரமமாக இருக்கும். ஆனால் உதயநிதியின் இந்த பிரச்சார யுக்தி பொதுமக்களை எளிதில் சென்றடைந்து இருக்கிறது. மத்திய அரசு தமிழகத்தை எந்த அளவுக்கு புறக்கணிக்கிறது என்பதை திமுக தரப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் உணர வைத்திருக்கிறார். அதே நேரத்தில் பீகார், உபி போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் நிதி இவ்வளவுதானா என்பதை மாற்று கருத்து இருந்தபோதிலும் பொருளாதாரத்தை சாமானியர்களுக்கும் எடுத்துச் செல்லும் உதயநிதி யுக்தி வெற்றி பெற்றதாகவே கருதுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.

இது தான் காரணம்: மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு பல ஆண்டுகளாக கட்டுமானத்தில் இல்லாத நிலையில் ஒரு செங்கலை வைத்து உதயநிதி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதன் அடிப்படையிலேயே தற்போது 29 பைசா விவகாரத்தையும் அவர் கையில் எடுத்திருக்கலாம் என்கின்றனர் அரசியல் களத்தில் நீண்ட காலமாக பயணிப்போர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+