இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. "அவர்" வருவாரா.. உதயநிதி ஸ்டாலின் விழாவில் பரபரப்பு.. என்னாச்சு?
உதயநிதி ஸ்டாலின் பூந்தமல்லி பகுதியில் நிவாரண உதவிகளை வழங்கினார்
சென்னை: சென்னை பூந்தமல்லியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக சுமார் 6 மணி நேரமாக கொட்டும் மழையில் பெண்களை, திமுகவினர் காக்க வைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு நிவாரண பொருட்களை பெற சென்றதால் பரபரப்பு.
திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், மழை வெள்ள பாதிப்புகளுக்கு ஆளும்கட்சியே காரணம் என்று அதிமுக குற்றஞ்சாட்டி வருகிறது.. அதிலும் எடப்பாடி பழனிசாமி எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் திமுகமீது புகார் சொல்லி வருகிறார்.
ஆனால், திமுகவோ, அதிமுக மீது பழியை போட்டு வருகிறது.. இந்த 10 வருடமாகவே இவர்கள்தான் ஆட்சியில் இருந்தனர் என்றும், அலட்சியப் பணிகள், டென்டர்களில் நடைபெற்ற ஊழல்களே இன்றைய அவலநிலைக்கு காரணம் என்றும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தெரிவித்து வருகின்றனர்.

எம்எல்ஏ
மாறி மாறி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொண்டாலும் இரு கட்சிகளுமே நிவாரண பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.. கனமழை பாதிப்புகளை சரிசெய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து ஒருவாரமாகவே, ஆய்வு நடவடிக்கையில் இறங்கி வருகிறார் முதல்வர்.. அதேபோல, சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் தொடர்ச்சியாக மழையால் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.

நிவாரண உதவி
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணத் தொகுப்பை உதயநிதி ஸ்டாலின் வழங்கி வருகிறார்.. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்குவதற்காக, உதயநிதி ஸ்டாலின் வருகை தர போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.. குறிப்பாக, சென்னை பூந்தமல்லி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து நிவாரண பொருட்கள் வழங்க உதயநிதி ஸ்டாலின் வருவதாக அறிவிப்பு வெளியானதுமே, அந்த பகுதியில் எதிர்பார்ப்பு கூடியது.

திமுக
எனவே, காலை முதலே சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதாக திமுகவினர் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.. ஆனால் உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு தாமதமானதால் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டும் மழையிலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் திமுகவினர் காக்க வைத்துவிட்டதாக சொல்கிறார்கள்..

சர்ச்சை
அதன் பிறகு வந்த உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்க ஆரம்பித்துள்ளார். நீண்ட நேரம் நின்றிருந்ததால், பெண்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டும், கூச்சலிட்டும், நிவாரணப் பொருட்களை வாங்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... அதேபோல, மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின் வழங்கிய நிவாரண பொருட்களின் பைகளில், கருணாநிதி, ஸ்டாலின் போட்டோவுடன் உதயநிதி படமும் அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
உங்களுக்கு எதிராதான் பேசி இருக்காரு! விஜயுடன் துரை வைகோ பேசியது என்ன? நைசாக விசாரித்த உதயநிதி












Click it and Unblock the Notifications