ரோட்டில் தனியாக காத்திருந்த பத்மா.. பிறகு நடந்தது நெகிழ்வு.. இதுதான் "மனிதம்".. இதுதான் உதயநிதி!
உதயநிதி ஸ்டாலினுக்காக மாற்று திறனாளி பெண் வரவேற்பு தந்தார்
சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்காக ஒரு பெண் கையில் பூவுடன் நடுரோட்டில் காத்து கொண்டிருந்தார்.. அதற்கு பிறகு நடந்ததுதான் நெகிழ்ச்சியின் உச்சக்கட்டம்..!
அதிமுக, திமுக போன்ற கட்சிகள் வழக்கம்போல போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வந்தாலும், இதில் புது என்ட்ரியாக நுழைந்திருப்பவர் உதயநிதி ஸ்டாலின்.. கடந்த முறை எம்பி தேர்தல் பிரச்சாரத்தைவிட இந்த முறை இவரது பிரச்சாரத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.. செல்லும் இடமெல்லாம் மகத்தான கூட்டம் சேர்கிறது.
அதேபோல, உதயநிதியும் மேடைப்பேச்சு, அடுக்கு மொழி பேச்சு என்ற ஃபார்மாலிட்டி இல்லாமல் எளிதாகவும், இயல்பாகவும், கேஷூவலாகவும் பேசி வருகிறார்.. அதேபோல, திடீர் திடீரென ஏதாவது சர்ப்ரைஸை போகிற இடங்களில் எல்லாம் தந்து கொண்டிருக்கிறார்.

திமுக நிர்வாகி
இப்படித்தான், 2 மாதத்துக்கு முன்பு காஞ்சிபுரம் பிரச்சாரத்துக்கு சென்றவர், அந்த தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ மறைந்த திமுக நிர்வாகியின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.. மற்றொரு முறை, ஆண்டிபட்டி வந்திருந்தபோது, உதயநிதியின் வண்டியை திடீரென சிறுவர்கள் வழிமறித்து, தங்களுக்கு கிரிக்கெட் பேட் வேண்டும் என்று கோரிக்கை வைக்க, உடனே அவர்கள் கேட்ட பேட், பந்து வாங்கி தந்து அசத்தினார்.

கல்யாண ஜோடி
அதேபோல, ஒருநாள் கரூர் வழியாக சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் திருமண மண்டபத்தில் இருந்த கல்யாண ஜோடி ஒன்று, உதயநிதியை பார்க்க நடுரோட்டுக்கு வந்துவிட்டது.. அப்படியே கல்யாண கோலத்தில் மாலையும் கழுத்துமாக காத்திருந்தனர்.. இவர்களை பார்த்ததுமே உதயநிதியின் காரை நிறுத்தி அவர்களுக்கு வாழ்த்து சொல்லி செல்பியும் எடுத்து கொண்டார். இப்போதும் அது போலவே, ஒரு சம்பவம் நடந்துள்ளது..

உதயநிதி ஸ்டாலின்
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உதயநிதி சேலம் மாவட்டம் கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் பகுதியில் பிரசாரம் செய்ய காரில் சென்றார்.. அப்போது உதயநிதி அந்த வழியாக வருகிறார் என்று தெரிந்து, அவரை நேரில் பார்க்க ஒரு பெண் வாழப்பாடி தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்தார்.. அவர் பெயர் பத்மா.. 2 கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி ஆவார்.. அவருடன் வேறு யாருமே இல்லை.. கையில் பூக்களை வைத்துக் கொண்டு ரோட்டில் காத்திருந்தார். அவரை பார்த்துவிட்ட உதயநிதி ஸ்டாலின், உடனடியாக தன்னுடைய வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு காரை விட்டு கீழே இறங்கி வந்தார்..!

சந்தோஷம்
அந்த பெண்ணின் வரவேற்பையும் பெற்று கொண்டு, சிறிது நேரம் பேசி கொண்டிருந்தார்.. எப்படியாவது உதயநிதியை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று காத்திருந்த பத்மாவுக்கு, உதயநிதி கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்தது இரட்டிப்பு சந்தோஷத்தை தந்தது.. அதன்பிறகு உதயநிதி காரில் ஏறிவிட்டார்.. இப்படி ஒரு பக்கம் அனல் & மற்றொரு பக்கம் தென்றலாய் வீசி கொண்டிருக்கிறது உதயநிதியின் பிரச்சாரம்..!
-
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்











Click it and Unblock the Notifications