நாய்க்கு பேர் வச்சீங்களே.. சோறு வச்சீங்களா? சந்தானம் ஸ்டைலில் உதயநிதி கிண்டல்.. யாரை தெரியுமா?
சென்னை: பாமக வேட்பாளர் அன்புமணியை, ''ஏமாற்றம் தடுமாற்றம் சூட்கேஸ்மணி'' என்று திமுக உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் செய்து இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் திமுக மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.
வேட்பாளர்களை ஆதரித்து இவர் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார். இந்த நிலையில் சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அவர் செய்த பிரச்சாரம் பெரிய வைரலாகி இருக்கிறது.

என்ன பேசினார்
உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில், சினிமாவில் ஒரு வசனம் சொல்வார்கள். நாய்க்கு சோறு வச்சியே பேர் வச்சியான்னு. அது மாதிரிதான் மோடி திட்டங்களை அறிவிக்கிறார். ஆனால் எதையும் செய்வது இல்லை. பல்லாயிரம் கோடிகளை செலவு செய்து பட்டேலுக்கு சிலை வைத்தார். ஆனால் அதை பராமரிக்கவில்லை.

இல்லை
இதோ இப்போது அங்கு வேலை பார்க்கும் நிர்வாகிகளுக்கு மூன்று மாதமாக ஒரு ரூபாய் கூட சம்பளம் வழங்கவில்லை. இதுதான் மோடியின் அரசு. மோடிதான் நமது நாட்டின் வில்லன். எல்லா படத்திலும் வில்லன் இருப்பான். மோடி இந்த மொத்த நாட்டுக்கே வில்லன். நாம்தான் இந்தியாவிற்கு ஹீரோ.

அதிமுக கூட்டணி
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் எல்லோரும் காமெடி பீஸ்தான். ஆனால் அன்புமணி கொஞ்சம் ஸ்பெஷல் பீஸ். முதல்வரை டயர் நக்கி என்று நாங்கள் சொல்லவில்லை அன்புமணிதான் வார்த்தைக்கு வார்த்தை கூறினார். ஆனால் அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளார். இப்போது மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்பது ஏமாற்றம், தடுமாற்றம், சூட்கேஸ் மணி என்று மாறிவிட்டது .

யார் டாடி
மோடிதான் எங்கள் டாடி என்று அதிமுக கூறுகிறது. இப்படி வருவோர் போவோர் எல்லாம் எப்படி ஒரு கட்சிக்கு டாடி ஆக முடியும். அப்படி என்றால் அதிமுக எப்படிப்பட்ட கட்சியாக இருக்க முடியும். இவர்களை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது, என்று உதயநிதி தனது பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications