நரிக்குறவர்களின் கனவு.. திமுக Vs பாஜக! ராஜ்யசபாவில் எதிர்ப்பையும் மீறி பேசிய திமுக எம்பி.. டிரென்ட்
சென்னை: நரிக்குறவர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியது யார் என்பது குறித்து திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சமூகவலைதளங்களில் வார்த்தை போர் நீடித்து வருகிறது.
நரிக்குறவர்கள் சமூகத்தினர் இத்தனை ஆண்டுகளாக மிகவும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்தனர். அவர்களை பழங்குடியினத்தவர் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த கோரிக்கை, முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவ சமூகத்தினரை நேரில் சந்தித்த போது வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

6 மாதங்கள்
இந்த கடிதம் எழுதிய 6 மாதங்களில் முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கை ஏற்கப்பட்டது. அதாவது பழங்குடியின பட்டியிலில் இனி நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை நேற்றைய தினம் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்தவுடன் திமுகவினரும் பாஜகவினரும் சமூகவலைதளங்களில் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.

விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின்
விருதுநகரில் முதல்வர் ஸ்டாலினை நரிக்குறவர்கள் சந்தித்து நன்றி கூறிய நிலையில் பாஜக அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில் நரிக்குறவ பெண் அஸ்வினி, பிரதமர் மோடிக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டின் கீழ் திமுகவினர் பலர் கமென்ட் செய்துள்ளார்கள். அஸ்வினியை கட்டாயப்படுத்தி பிரதமருக்கு நன்றி சொல்ல வைத்த அண்ணாமலை என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

நரிக்குறவர்களின் கோரிக்கை
இதற்கு பாஜகவினரோ நரிக்குறவர்களின் கோரிக்கை நீண்ட கால கோரிக்கை எனும் போது 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மத்தியில் அங்கம் வைத்த திமுக அரசு கையை கட்டி வேடிக்கை பார்த்தது ஏன், 2014 க்கு பிறகு மோடி வருவார் , நரிக்குறவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார் , அந்த பேரை நாம் தட்டி செல்லலாம் என்ற நினைப்பில் சும்மா இருந்தீரா என பாஜகவினர் பதில் விமர்சனம் செய்துள்ளனர்.

திருச்சி சிவா
இந்த நிலையில் திருச்சி சிவா எம்பி தான் மாநிலங்களவையில் பேசிய பேச்சை தனது ட்விட்டரில் போட்டுள்ளார். அந்த வீடியோவில் நரிக்குறவர், குருவிக்காரன் பழங்குடியினத்தவர்கள் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். வேட்டையாடுதல், காடுகளில் கூட்டமாக இருத்தல் உள்ளிட்டவை மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்கள்.

வேட்டையாடுதல்
வேட்டையாடுதலுக்கு தடை விதிக்கப்பட்டதால் அதை வாழ்வாதாரமாக கொண்டிருந்த நரிக்குறவர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆங்கிலேயர் காலத்தில் நரிக்குறவர்கள் 1871 ஆம் ஆண்டு குற்றப் பரம்பரை சட்டத்தில் கீழ் கொண்டு வரப்பட்டார்கள். இதன் மூலம் வனத்தில் வாழும் இந்திய பழங்குடியினத்தவரை ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

சுதந்திரம்
இந்த சட்டம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ரத்து செய்யப்பட்ட போதிலும் இந்த சமூகத்தினர் மீதான சமூக இழிவு என்பது இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 1965 ஆம் ஆண்டு லோக்கூர் தலைமையிலான கமிட்டி, நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அதன்படி நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரின் வாழ்க்கைத் தரம் மேம்பட அவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என திருச்சி சிவா கோரிக்கை விடுத்திருந்தார்.

திமுகவினர் வைரல்
இந்த வீடியோவை திமுகவினர் வைரலாக்கி வருகிறார்கள். இது போல் நாடாளுமன்றத்தில் இத்தகைய பழங்குடியினத்தவரின் பிரச்சினைகள் குறித்து இதுவரை எந்த பாஜக எம்பியாவது பேசியிருந்தார் என்பதை சொல்ல முடியுமா, அல்லது வீடியோவாகத்தான் எடுத்து போட முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படியாக இந்த வார்த்தை போர் நீண்டு வருகிறது.
-
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு












Click it and Unblock the Notifications