சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடவே கூடாது.. வார்னிங் கொடுத்த எடப்பாடி.. ஜெ. ஸ்டைலில் திமுகவிற்கு "கேட்" போட திட்டம்.. விளாசல்!

Google Oneindia Tamil News

சென்னை: 2011ல் திமுகவிற்கு நடந்தது போலவே மீண்டும் நடக்க வேண்டும்.. தமிழக சட்டசபையில் திமுகவின் பலத்தை மொத்தமாக காலி செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் அதிமுக உள்ளதாம்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சார களம் சூடுபிடித்து உள்ளது. முக்கியமாக அதிமுக, திமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளின் பிரச்சார களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

சீக்கிரம் ஏதாவது பண்ணுங்க.. தலைமைக்கு சென்ற மெசேஜ்.. எதிர்பார்க்காத ஸ்டாலின்.. கலக்கத்தில் திமுக! சீக்கிரம் ஏதாவது பண்ணுங்க.. தலைமைக்கு சென்ற மெசேஜ்.. எதிர்பார்க்காத ஸ்டாலின்.. கலக்கத்தில் திமுக!

முதல்வர் பழனிசாமி முறையாக திட்டங்களை வகுத்து தமிழகம் முழுக்க சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

இதில் பேசிய முதல்வர் பழனிசாமி.. ஸ்டாலினால் எதிர்கட்சித்தலைவராக கூட ஆக முடியாது. திமுகவிற்கு இந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது. அதிமுகவின் வெற்றி உறுதி. திமுக மக்களை மதிக்காது. திமுக தனது தொண்டர்களை கூட மதிக்காது.

குடும்பம்

குடும்பம்

திமுகவிற்கு எப்போதும் அவர்களின் குடும்பம்தான் முக்கியம். வாரிசு அரசியல் மீது மட்டுமே திமுக கவனம் செலுத்தும். 2011க்கு முன் இருந்த திமுக ஆட்சியில் ஒரு நல்ல விஷயம் கூட நடக்கவில்லை. அதனால்தான் திமுக அதை பற்றி பேசுவது இல்லை. திமுகவை ஆட்சிக்கு வர விடவே கூடாது.

வார்னிங்

வார்னிங்

ஏன் திமுகவை எதிர்க்கட்சியாக ஆக கூட விட கூடாது. திமுகவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். கண்டிப்பாக அதிமுகதான் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றிபெறும் என்று முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரத்தில் நேற்று பேசினார்.

பேசினார்

பேசினார்

முதல்வர் பல விஷயங்களை மனதில் வைத்துத்தான் இப்படி பேசினார் என்கிறார்கள். கடந்த 2011 சட்டசபை தேர்தலில் திமுக தமிழக சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த தேமுதிகதான் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியாக மாறியது.அந்த தேர்தலில் திமுக வெறும் 23 இடங்களில் மட்டும் வென்று மிக மோசமான தோல்வியை தழுவியது.

 சாதனை

சாதனை

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நிகழ்த்திய சாதனையாக இப்போதும் இது பார்க்கப்படுகிறது. தற்போது ஜெயலலிதா போலவே அதே ஸ்டைலில் முதல்வர் பழனிசாமியும் திமுகவை வீழ்த்தும் திட்டத்தில் இருக்கிறார். இதைத்தான் நேற்று அவர் பிரச்சாரத்திலும் குறிப்பிட்டுள்ளார். திமுகவை மொத்தமாக வீழ்த்தி எதிர்க்கட்சி கூட ஆக முடியாமல் செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் முதல்வர் பழனிசாமி இருக்கிறாராம்.

எதிர்கட்சி

எதிர்கட்சி

அதாவது 10% இடங்களுக்கு அதிகமாக திமுகவை வெல்ல விட கூடாது என்று முதல்வர் கருதுகிறார். 2011ல் நடந்தது போலவே மீண்டும் எப்படியாவது நடக்க வேண்டும் என்ற திட்டத்தில் அதிமுக உள்ளது. களத்தில் அதிமுகவிற்கு ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் திமுகவிற்கு மீண்டும் பெரிய தோல்வியை கொடுக்க முடியும் என்று அதிமுக நம்புகிறது.

பிளான்

பிளான்

ஆனால் திமுகவும் இதே பிளானில்தான் இருக்கிறதாம். எப்படியாவது அதிமுகவை 23 இடங்களுக்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெல்ல விட வேண்டும். அப்படி செய்தால் சட்டசபையில் எதிர்க்கட்சியே இருக்காது.

எதிர்க்கட்சி

எதிர்க்கட்சி

234 இடங்களில் 24 இடங்களை வெல்லும் கட்சிதான் எதிர்க்கட்சியாக இருக்கும். இதனால் அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்க கூடாது என்ற திட்டத்தில் திமுகவும் இருக்கிறதாம்!.. இரண்டு கட்சியும் கிட்டத்தட்ட இந்த பிளானில்தான் இருக்கிறது என்கிறார்கள்.

English summary
DMK vs AIADMK: EPS wants to repeat Jayalalitha 2011 victory against M K Stalin in the upcoming eletion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X