வாயை விட்ட எடப்பாடி.. இறங்கி அடித்த ஸ்டாலின்.. விடாத அதிமுக.. காணாமல் போன தவெக விஜய்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களம் மீண்டும் மெல்ல மெல்ல திமுக vs அதிமுக என்ற பழைய சூழலுக்கே திரும்பி வருகிறது!
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே அரசியல் அக்னி ஜுவாலை வீசத் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 23 தேர்தல் தேதி குறித்தாயிற்று. ஏப்ரல் 21 வரை பிரச்சாரம் செய்யலாம். இடையில் இருக்கும் இந்த 15 நாட்களில் தான் தமிழகத்தின் தலைவிதி தீர்மானிக்கப்படப் போகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாகப் பேசப்பட்ட 'மும்முனைப் போட்டி' என்கிற பிம்பம் மெல்லக் கரைந்து, களம் மீண்டும் அந்தப் பழைய 'திராவிட டர்பி' (DMK vs AIADMK) மேட்ச்சாகவே மாறியிருப்பதுதான் லேட்டஸ்ட் ட்விஸ்ட்!

மைக் பிடித்து கர்ஜிக்கும் எடப்பாடியார்!
"யார் சொன்னது எங்களிடம் வேகம் இல்லை என்று?" எனச் சீறுவது போல இருக்கிறது எடப்பாடியின் ரூட் மேப். கொங்கு மண்டலம் தொடங்கி டெல்டா வரை எடப்பாடி பழனிசாமி அடிக்கும் பேச்சில் அனல் பறக்கிறது. வழக்கமாகப் பார்த்துப் பார்த்துப் பேசும் எடப்பாடி, இந்த முறை ரூட்டை மாற்றி நேரடியாக ஸ்டாலின் குடும்பத்தையே டார்கெட் செய்கிறார்.
"இது ஒரு குடும்பத்தின் கம்பெனி" என எடப்பாடி எகிற, "கருணாநிதி வீட்டுச்சிறை" என்றெல்லாம் குண்டை தூக்கி போட்டுள்ளார். அதற்கு "ஊழலின் மொத்த உருவமே நீங்கள்தான்" "கருணாநிதி பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது" என அறிவாலயம் பதிலடி கொடுக்க... இடையில் கருணாநிதி - ஜெயலலிதா காலத்து அந்த 'பெர்சனல்' அரசியல் அட்டாக் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது. உதயநிதியின் 'விளையாட்டு' பாணியிலான நக்கலும், எடப்பாடியின் 'பர்சனல்' பாணி ஆவேசமும் களத்தை இரண்டாகப் பிரித்து வைத்திருக்கிறது.
'மிஸ்ஸிங்' லிஸ்ட்டில் தவெக?
இங்கேதான் மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது - எங்கே போனார் விஜய்?
"தமிழக அரசியலை மாற்றப் போகிறேன், என் எதிரி இவர்தான், சித்தாந்த எதிரி அவர்தான்" என மாநாடு போட்டு அதிரடி காட்டிய விஜய், இப்போது தேர்தல் களத்தில் 'சைலன்ட்' மோடுக்கு மாறியிருப்பது அக்கட்சித் தொண்டர்களுக்கே பெரும் அதிர்ச்சி.
களம் காணாத கேடயங்கள்: தவெக நிர்வாகிகள் இன்னும் களத்தில் இறங்கி பூத் கமிட்டி வேலைகளைப் பார்க்கவில்லை.
மௌனமே மகா மந்திரமா?: சீமான் ஒரு பக்கம் ஊர் ஊராகப் மைக் பிடித்துக் கத்திக் கொண்டிருக்க, விஜய் இன்னும் தனது 'வெற்றிப் பயணத்தை' தொடங்கவே இல்லை.
டிவி-யில் மட்டுமே தவெக?: சோஷியல் மீடியாவிலும், டிவி விவாதங்களிலும் மட்டுமே தவெக (TVK) இருக்கிறது, ஆனால் திண்ணைப் பிரச்சாரத்திலோ, தெருமுனைப் பிரச்சாரத்திலோ அவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.
'வழக்கமான' ஆட்டம் ஆரம்பம்!
விஜய் தரப்பில் இன்னும் 'வெயிட் அண்ட் வாட்ச்' பாலிசிதான் கடைபிடிக்கப்படுகிறது போலும். இன்றைய சென்னை பிரச்சாரத்தையும் கூட ரத்து செய்துவிட்டார்கள். ஆனால், அரசியலில் இடைவெளி என்பது ஆபத்தானது. அந்த இடைவெளியை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன திராவிடக் கட்சிகள். இப்போது மக்களிடம் பேசப்படும் விஷயங்கள் எல்லாம்:
திமுக-வின் சாதனையா?
அதிமுக-வின் எழுச்சியா?
இதுதான் இன்றைய டாக் ஆஃப் தி டவுன். "விஜய் வருவார், ஆட்டத்தை மாற்றுவார்" என்று எதிர்பார்த்த நியூட்ரல் ஓட்டர்களுக்கு, இப்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. களத்தில் தொண்டர்கள் இல்லை, தலைவரின் குரல் இல்லை, திட்டமான பிரச்சாரப் பயணம் இல்லை.
தமிழகத்தின் தற்போதைய தேர்தல் களம், 'புதிய ரத்தம்' பாய்ச்சும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைய 'கிளாசிக்' மோதலாகவே நீடிக்கிறது. புது ரத்தம் 'உறைந்து' போய் கிடக்க, பழைய ரத்தம் பாயத் தொடங்கிவிட்டது.
சினிமாவில் கிளைமாக்ஸில் வந்து ஹீரோ ஜெயிப்பது எளிது. ஆனால், அரசியலில் கிளைமாக்ஸ் வரை களத்தில் நிற்பவனே ஹீரோ! விஜய் அதை உணர்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications