அதிமுக vs திமுக.. தொழில் துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி என்ன? டேட்டாவுடன் வந்த டிஆர்பி ராஜா!
சென்னை: அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் தொழில் துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கம் அளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் 4 சிப்காட் மட்டுமே தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 33 சிப்காட் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், திமுக ஆட்சியில் 8 டைடல் மற்றும் நியோ டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் என்ற நிகழ்ச்சி தமிழக அரசு சார்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துறை வாரியாக பங்கேற்று கடந்த 5 ஆண்டுகளில் தாங்கள் செய்த பணிகள், ஒப்பந்தங்கள், கொண்டு வந்த திட்டங்கள் குறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் தொழில்துறை அமைச்சர்கள் டிஆர்பி ராஜா தனது துறை குறித்து பல்வேறு கருத்துக்களை பேசி இருக்கிறார்.

அதில் டிஆர்பி ராஜா பேசுகையில், அதிமுக ஆட்சியின் 5 ஆண்டுகள், திமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் தொழில்துறையில் கொண்டு வரப்பட்ட வளர்ச்சி குறித்து பேசலாம் என்று நினைக்கிறேன். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளை எடுத்தால், இன்னும் மோசமாக இருக்கும். 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் 471 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு ரூ.4,13,414 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 13.06 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்பின் அமைந்த திமுக ஆட்சியில் சுமார் இரண்டரை மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது 1,190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு ரூ.12,54,133 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 36.06 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து சுமார் 72% வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் 4 சிப்காட் தொழிற்பேட்டைகள் மட்டுமே உருவாக்கப்பட்டது. மணப்பாறை, திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் உருவாக்கினார்கள். சில இடங்களில் தொடங்கப்பட்டாலும், முடிக்கப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சி அமைந்த பின் 33 சிப்காட் தொழிற்பேட்டைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களில் சிப்காட் கொண்டு வரப்பட்டுவிட்டது.
கன்னியாகுமரியில் சுற்றுலா தொடர்பான சிப்காப் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி இல்லாத நாகை, திருவாரூரில் சிப்காட் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் டெக்ஸ்டைல் பார்க் கொண்டு வந்துள்ளோம். இதனை ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விரிவாக்க உள்ளோம். அதிமுக ஆட்சியில் உற்பத்தி துறையில் பொருள்கள் ஏற்றுமதி மதிப்பு ரூ.26.15 பில்லியன் டாலராக இருந்தது.
2021 - 2026 வரையிலான திமுக ஆட்சியில் அது ரூ.50.07 பில்லியன் டாலராக உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் துறையில் தமிழ்நாடு மிகப்பெரிய பாய்ச்சலில் இருக்கிறது. இது விரைவில் பன்மடங்கு உயரும். அதேபோல் கடந்த 5 ஆண்டுகளில் 8 டைடல் பார்க் மற்றும் நியோ டைடல் பார்க் திறக்கப்பட்டுள்ளன. 8 ஒஇடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. 4 இடங்களில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
-
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து! -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக்












Click it and Unblock the Notifications