பீகாரில் 10 ஆயிரம் கொடுத்த மாதிரி.. தமிழகத்திற்கு ஒரு திட்டம் கொண்டுவந்தால் அதிமுக கூட்டணி வெல்லுமா?
சென்னை: பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பாக மகளிருக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தது போல், தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு ஒரு திட்டம் கொண்டுவந்தால் அதிமுக கூட்டணி வெல்லுமா என்று விவாதம் தொடங்கியுள்ளது.
பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளை வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது தமிழ்நாட்டில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. நிதிஷ் குமார் மீதான அதிருப்தி, வேலைவாய்ப்பு மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சனைகள் என்று ஏராளமான சிக்கல் இருந்த போதும், என்டிஏ கூட்டணி மீண்டும் வென்றுள்ளது.

பீகார் தேர்தலில் மகளிர் மற்றும் ஆண்கள் இடையிலான வாக்கு சதவிகிதம் சுமார் 9ஆக இருந்தது. இதனால் மகளிர் வாக்குகள் பெருவாரியாக என்டிஏ கூட்டணி பக்கம் சென்றதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சட்டசபைத் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பாக பீகாரில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் மூலமாக 75 பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
சுமார் 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10 ஆயிரம் நேரடியாக செலுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள பெண்களுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை தொடர்ந்து நிதியுதவி அளிக்கப்படும் என்று பீகார் அரசு அறிவித்தது. தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன் என்டிஏ கூட்டணியின் இந்த திட்டம் மகளிர் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பீகார் தேர்தலுக்கு பின் பாஜகவின் பார்வை தமிழ்நாடு பக்கம் திரும்பி இருக்கிறது. இப்படியான சூழலில், ஒருவேளை தமிழ்நாட்டிலும் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன் இப்படி நடந்தால், மக்களே நீங்களே என்ன நடக்கும் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications