மைனாரிட்டி ஆட்சி.. திமுகவின் பழைய வடுவை குத்திக் காட்டும்.. காங்கிரசின் மாணிக்கம் தாகூர்
சென்னை: 2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் முடிவை செயல்படுத்தாதது காங்கிரஸ் கட்சியின் தவறு என்று மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். 2006 சட்டசபைத் தேர்தலில் நடந்தது என்ன? காங்கிரஸ் கட்சி 2006 தேர்தலை திடீரென பேசுவதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், காங்கிரஸ் கட்சி மட்டும் ஆட்சியில் பங்கு என்று பேசி வருகிறது. பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்று தெளிவாக பதில் அளித்திருக்கிறார்.

மாணிக்கம் தாகூர் பதிவு
இதற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா்? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை.. 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது தமிழக காங்கிரஸின் தவறு என்று பதிவிட்டுள்ளார். இதனால் 2006 சட்டசபைத் தேர்தலை திடீரென மாணிக்கம் தாகூர் பேசுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
2006ல் நடந்தது என்ன?
2006 சட்டசபைத் தேர்தலின் போது மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் பாமகவுடம் பெற்றிருந்தன. திமுக தரப்பில் 132 தொகுதிகளில் போட்டியிட்டு 96 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல் காங்கிரஸ் கட்சி தரப்பில் 48 தொகுதிகளில் போட்டியிட்டு 34 இடங்களில் வென்றது. பாமகவை பொறுத்தவரை 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது.
யாருக்கும் பெரும்பான்மை இல்லை
அப்போது அதிமுக 188 தொகுதிகளில் போட்டியிட்டு 61 இடங்களில் வென்றது. அதேபோல் தேமுதிக 232 தொகுதிகளில் போட்டியில் 1 தொகுதியில் வென்றது. தேமுதிக மொத்தமாக 8.4 சதவிகித வாக்குகளை பெற்றது. இதனால் தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும் திமுக தனித்தே ஆட்சி அமைத்தது.
மைனாரிட்டி ஆட்சி
காங்கிரஸ் மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தன. காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை. அதேபோல் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, ஒவ்வொரு மேடையிலும் திமுகவை மைனாரிட்டி ஆட்சி என்று விமர்சித்து வந்தார். இந்த மைனாரிட்டி ஆட்சியை மாணிக்கம் தாகூர் நினைவுபடுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
பாடம் கற்ற திமுக
ஜெயலலிதாவின் இந்த விமர்சனமே திமுக அதன்பின் தொடர்ச்சியாக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது. 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. இம்முறையும் 170 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட திமுக முடிவு செய்திருக்கிறது.
காங்கிரஸ் அழுத்தத்திற்கான பின்னணி
அதிக தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்பது திமுகவின் நிலைப்பாடு. ஆனால் கூடுதல் தொகுதிகளை பெற்றால், கூட்டணி ஆட்சிக்கு திமுகவை தள்ள முடியும் என்று காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. இதனால் இறுதியாக என்ன முடிவு எடுக்கப்படும் என்பதே அக்கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!












Click it and Unblock the Notifications