சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அடி தூள்".. டெல்டாவை வாரி சுருட்டும் திமுக.. 34 சீட் வெல்லுமாம்.. அதிமுக 9 தானாம்.. ஏபிபி சிவோட்டர்

டெல்டா மாவட்டங்களில் திமுக 34 இடங்களை பெறும் என்று கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: டெல்டா மாவட்டங்களில் திமுக அபார வெற்றியை பெறும் என்று தெரிகிறது.. டெல்டாவில் 34 இடங்கள் வரை திமுக பெறும் என்றும் அதிமுகவோ வெறும் 9 இடங்களை மட்டுமே பெறும் என்றும் ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் 234 தொகுதிகளில் திமுக 160 -172 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது என ABP செய்திகள் மற்றும் சி-வோட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸிட் போல்கள் தெரிவிக்கின்றன..

செல்வாக்கு அதிகம் இருப்பதாக கருதப்பட்ட, அதிமுகவுக்கு ஒட்டுமொத்தமாக 58 முதல் 70 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு என்று கூறப்படுகிறது.

சல்லி சல்லியாக நொறுங்கிய சல்லி சல்லியாக நொறுங்கிய "பிளான்".. வாக்குகளை பிரித்த கமல், சீமான்.. திமுகவுக்கு பிளஸ்.. அதிமுக ஷாக்

திமுக

திமுக

இதில் குறிப்பாக, மண்டல வாரியாக பார்த்தால் டெல்டாவிலும் திமுகவே முந்தி கொண்டு வந்துள்ளது.. தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கடலூர் உட்பட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த மண்டலத்தில் மொத்தம் 41 தொகுதிகள் உள்ளன.

டெல்டா

டெல்டா

இந்த டெல்டாவை பொறுத்தவரை மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், டெல்டாவில் பெரும்பான்மை பெற்றவர்கள்தான் கோட்டையிலும் ஆட்சி அமைத்துள்ளார்கள்.. இதுதான் வரலாறு.. அந்த வகையில், டெல்டாவின் 41 தொகுதிகளில் திமுக 51.8 சதவிகித வாக்குகள் பெறும் என கணிக்கப்படுகிறது.

தினகரன்

தினகரன்

அதிமுகவோ, 33.1 சதவிகித வாக்குகளுடன் டெல்டா பகுதியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது... டெல்டாவை பொறுத்தவரை அதிமுகவை விட அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் டிடிவி தினகரன்தான்.. டெல்டா பகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத டிடிவி. தினகரனின் இந்த முறை கூட்டணி வைத்து, 4.3 சதவிகித வாக்குகள் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது..,. மற்ற கட்சிகளுக்கோ வெறும் 10.8 சதவிகித வாக்குகளே பெறுகின்றன.

அதிமுக

அதிமுக

சுருக்கமாக சொன்னால், டெல்டாவில் திமுக 32 முதல் 34 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தெரிகிறது.. கடந்த தேர்தலை விட இந்த முறை 17 தொகுதிகள் அதிகம் பெற்றுள்ளது துமுக.. அதிமுக போன முறை 23 இடங்களில் வெற்றிபெற்றது, ஆனால், இந்த முறை 7-9 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறுவார்கள் என தெரிகிறது. அதாவது, அமமுக வாக்கு சதவீதத்தில் முன்னுக்கு வந்தாலும், தொகுதிகளை எதுவுமே பெறவில்லை என்பதுதான இந்த கணிப்புகளின் நிலவரமாக உள்ளது.

English summary
DMK will get 34 Districts in Delta Region, ABP C voter results
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X