20 ஆண்டு 'கனவு'.. எழும்பூரில் ஜான் பாண்டியன் தோல்வி முகம் - தந்தி டிவி எக்சிட் போல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று (ஏப்.29) வெளியாகின. இதில், சென்னை எழும்பூர் தொகுதியில், திமுக வெற்றிப் பெரும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் முதல் முடிவடைந்தது. இதில், 72.78 சதவீத வாக்குகள் பதிவானது. இது கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், 2.03 சதவீதம் குறைவாகும்.

கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், வாக்குகள் குறைவாகவே பதிவாகின. சுட்டெரித்த வெயில், கொரோனா பரவல் உள்ளிட்ட பல காரணிகள் வாக்கு சரிவுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டன.

 எழும்பூர் தொகுதி

எழும்பூர் தொகுதி

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதில், தொகுதி வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் முக்கியமான தொகுதிகளில் ஒன்றான எழும்பூரில்(தனி) அதிமுக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் , திமுக, கமலின் மக்கள் நீதி மய்யம், அமமுக சார்பில் தேமுதிக, நாம் தமிழர் கட்சி ஆகியவை மோதுகின்றன.

 10 முறை வெற்றி

10 முறை வெற்றி

சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை பூங்கா நகர், பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளை எல்லையாக கொண்டுள்ளது. இதுவரை இங்கு 14 முறை நடந்த தேர்தல்களில் 10 முறை திமுக வென்றுள்ளது. காங்கிரஸ் 2 முறையும், தேமுதிக மற்றும் சுயேட்சை தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, எழும்பூர் தொகுதியில் இருந்து 1989 முதல் 2006 வரை ஐந்து முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஐந்து முறையும் திமுக சார்பில் வென்றிருந்தார்.

 ஜான் பாண்டியன்

ஜான் பாண்டியன்

எழும்பூர் தொகுதியில் இந்த முறை, திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஜான்பாண்டியன், தேமுதிக சார்பில் பிரபு, நாம் தமிழர் கட்சி சார்பில் கீதா, மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரியதர்ஷினி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். திமுக கோட்டையாக கருதப்படும் எழும்பூரில் கடந்த 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ரவிச்சந்திரன் 55 ஆயிரத்து 060 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த முறை திமுக சார்பில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பரந்தாமன் போட்டியிடுகிறார். திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த இவர், கடந்த தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த முறை எழும்பூரில் போட்டியிடுகிறார்.

 20 ஆண்டுகள் கழித்து

20 ஆண்டுகள் கழித்து

அதிமுக கூட்டணியை பொறுத்தவரை தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஜான்பாண்டியன், 20 ஆண்டுகளுக்கு முன்பாக, 2001 தேர்தலில் இதே எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டவர். அப்போது வெறும் 84 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியிடம் தோல்வி அடைந்தார். 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் திமுகவை எதிர்த்து களமிறங்கி உள்ளார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

 திமுகவுக்கு வெற்றி

திமுகவுக்கு வெற்றி

இதன் நிலையில், தந்தி டிவி கருத்துக்கணிப்பின் படி, எழும்பூரில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றிப் பெற வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையின் மிக முக்கிய தொகுதியை அதிமுக இழந்துவிடும் சூழல் உள்ளது. எதுவாக இருந்தாலும், மே 2ம் தேதி ரிசல்ட் தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+