Periyar Row: பெரியாரே மண்ணுதான்.. சீமான் பேச்சுக்கு தேர்தலுக்கு பின் பதிலடி-அமைச்சர் முத்துசாமி
சென்னை: தமிழ்நாடு தந்தை பெரியார் மண் அல்ல.. பெரியாரே எங்களுக்கு எல்லாம் ஒரு மண்ணுதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசிவருவதற்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவடைந்த பின்னர் பதிலடி தருவோம் என ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் தொடர்பான தரவுகளை வைத்து அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிப்பதில் எங்கேயாவது சிக்கல் இருந்தால் அங்கே நேரிலேயே சென்று நாங்கள் ஆய்வு செய்வோம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு அமைச்சர்கள் வந்தாலும் வராவிட்டாலும் கிடைக்க வேண்டிய நிதி ஒதுக்கீடு வழக்கமாகவே வந்து கொண்டிருக்கும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் வருவது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை. உரிய நேரத்தில் முடிவு செய்வோம்.
திமுகவில் அதிமுகவை இணைக்க எம்ஜிஆர் விரும்பினார் என அமைச்சர் துரைமுருகன் பேசியிருக்கிறார். இதுபற்றி ஒரு கேள்வி பதிலில் விளக்கம் தந்துவிட முடியாது. பல்வேறு கால கட்டங்களில் நடந்த நிகழ்வுகள்... அது குறித்து விரிவாகத்தான் பேச முடியும். இப்போது தேர்தல் பணிகளில் இருப்பதால் அதுபற்றி பின்னர் பேசலாம்.
தந்தை பெரியாரை ஒரு மண்ணு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருக்கிறார். இதற்கு எல்லாம் தேர்தலுக்குப் பின்னர் பதில் தருவோம். தந்தை பெரியார் யார் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே தெரியும்.. சீமான் கைது செய்யப்படாதது குறித்து செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி இருக்கிறார். தேர்தல் முடிவடைந்த பின்னர் பார்த்துக் கொள்வோம். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
சீமான் பேசியது என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் புதுக்கோட்டையில் பேசிய சீமான், இது பெரியார் மண் அல்ல.. தமிழர் மண்.. சேர சோழ பாண்டியர் மண்.. பெரியார் சமூக சீர்திருத்தவாதி அல்ல.. சமூகத்தை சீரழித்தவர்.. தந்தை பெரியார் மண் என யாராவது பேசினால் கொலை வெறியாகிவிடும் என கூறியிருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications