தட்டித் தூக்கும் திமுக.. தமிழகத்தில் 170 இடங்களை வெல்லும்.. அதிமுகவுக்கு 68.. ரிபப்ளிக் எக்சிட் போல்
திமுக தலைவர் ஸ்டாலின் ஜெ.பாணியிலான அரசியலை கையில் எடுப்பாரா?
சென்னை: ரிபப்ளிக் - சிஎஎன்எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் முடிவுகள் வெளியாகி உள்ளன.. அதில், திமுகவுக்கு 160 முதல் 170 வரை இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.. அதிமுகவுக்கு 58 முதல் 68 வரை இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அமமுகவுக்கு 4 முதல் 6 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சட்டசபை தேர்தல், கடந்த 6ம் தேதி முடிவடைந்த நிலையில், மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது.. எனினும் எக்ஸிட் போல்கள் என்று சொல்லப்படும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில் ரிபப்ளிக் - சிஎஎன்எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் முடிவுகள் வெளியாகி உள்ளன.. அதில், திமுகவுக்கு 160 முதல் 170 வரை இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.. அதிமுகவுக்கு 58 முதல் 68 வரை இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அமமுகவுக்கு 4 முதல் 6 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மநீம, நாம் தமிழர் கட்சி உட்பட பிற கட்சிகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பே, பல்வேறு நிறுவனங்களின் ஏராளமான கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்தன. அவைகளில் திமுகவுக்கே முதலிடம் என்றும் 150+ இடங்களை கண்டிப்பாக எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல ஆளும் அதிமுக அரசுக்கு 70-க்கும் குறைவான இடங்களே வெற்றி வாய்ப்பு என்று கூறப்பட்டிருந்தது.. அவ்வாறே இந்த முறையும் எக்ஸிட் போல்களின் முடிவுகள் தெரியப்படுத்தி வருகின்றன.
எப்படி தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்றார்களோ, அதுபோலவே, இந்த தேர்தலுக்கு பிந்தைய கணிப்பிலும் ஒரு இடம்கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications