“திமுககாரன் போல யாரும் வேலை செய்ய முடியாது என பாஜகவினரே சொல்கின்றனர்”.. ஸ்டாலின் பேச்சு!
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திமுகவினரை போன்று யாராலும் வேலை செய்ய முடியாது என்று பாஜகவினரே கூறி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர், "தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை எழுச்சியோடு கொண்டாடும் இந்த சிறப்பான நேரத்தில் உங்களை எல்லாம் சந்தித்து, பொங்கல் வாழ்த்துகளை தெரிவிக்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு முன்கூட்டியே கிடைத்திருக்கிறது.

முதலமைச்சராக என்ன தான் பல ஊர்களில் நடைபெறுகிற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் கொளத்தூர் தொகுதியில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால், அதில் ஒரு வேகமும், ஒரு எனர்ஜியும் எனக்குள் வந்து விடுகிறது. ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் இதை நான் சொல்வதுண்டு.
பொங்கல் விழாவை இன்றைக்கு நாம் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், என்னென்ன திட்டங்களையெல்லாம் செய்திருக்கிறது? என்னென்ன சாதனைகளையெல்லாம் புரிந்திருக்கிறது? என்பது உங்களுக்கு நான் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், நீங்கள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காகத் தான் இந்த பொங்கல் விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நீங்கள் தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளில் 50 சதவிகிதம் முடித்துவிட்டீர்கள். இன்னும் 50 சதவிகிதம் தான் மீதம் இருக்கிறது. இன்றைக்கு பாஜக உட்பட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள், திமுகவினர் போன்று யாராலும் வேலை செய்யமுடியாது என்று கூறுகின்றனர்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 1967-ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்த போது அதற்கு முன்பாக முதலமைச்சராக இருந்த பெரியவர் பக்தவச்சலம் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்த போது, "திமுக காரன் ஒரு சிங்கில் டீயை குடித்து விட்டு பம்பரமாக வேலை செய்வான். அதற்கு நாமெல்லாம் ஈடாக முடியாது" என்று வெளிப்படையாகவே சொன்னார். அதே உணர்வோடு இன்றைக்கும் நான் பார்க்கிறேன்.

200 தொகுதிகளுக்கு குறையாமல் நம்முடைய கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். நீங்கள் ஆற்றக்கூடிய பணிகளை பார்க்கும் போது 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. அந்த நம்பிக்கையோடு பொங்கல் விழாவை நாம் கொண்டாடுவோம். வரவிருக்கும் தேர்தலில் ஒரு மாபெரும் வெற்றி பெறுவதற்கு உறுதியெடுப்போம்" என்று பேசியுள்ளார்.
-
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்











Click it and Unblock the Notifications