சாம்சங்கை விடுங்க.. ஐசிஎஃப்-ல் தொழிற்சங்கத்திற்காக போராடும் திமுக! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் ஐசிஎஃப் தொழிற்சாலையில் சங்கம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. திமுகவின் தொழிற்சங்கத்திற்காக, அக்கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், சங்கம் அமைப்பது அடிப்படை உரிமை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 1990களில் தனியார்மயம் மற்றும் தாராளமயம் என இரண்டு கொள்கைகள் அப்போதைய காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தற்போது ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் முளைத்துள்ளன. ஆனால் இந்த தொழிற்சாலைகளில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே மலையளவு வித்தியாசம் இருக்கிறது. விடுமுறையில் தொடங்கி அடிப்படை ஊதியம், வேலை வாய்ப்பு உரிமை, பணி பாதுகாப்பு என பல தளங்களில் தனியார் நிறுவன ஊழியர்கள் சுரண்டப்படுகிறார்கள்.

எனவே தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் குறித்த கோரிக்கைகள் எழுந்திருக்கிறது. தனியார் நிறுவனங்கள் அதிகமாகும்போதும், உழைப்பு சுரண்டல் எல்லை மீறும்போது தொழிற்சங்கம் குறித்த கோரிக்கையை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இப்படித்தான் காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்திலும் தொழிற்சங்கம் குறித்த கோரிக்கை எழுந்திருந்தது. இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சாம்சங் நிறுவனமும், அரசும் தொழிற்சங்கத்திற்கு எதிராக நின்றதால், சிஐடியு தற்போது நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
மறுபுறம் ரயில் பெட்டி உற்பத்தி ஆலையான ஐசிஎஃப்-ல் தொழிற்சங்கம் வேண்டும் என்றும், இதற்காக மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் திமுக, சென்னை நீதிமன்றத்தை நாடியுள்ளது.
ஐசிஎஃப்-ல் தொழிலாளர்களின் கோரிக்கையை பிரதிபலிக்க பணியாளர்கள் கவுன்சில் இருக்கிறது. ஆனால் இதில் நிர்வாக தலையீடு அதிகமாக இருப்பதாகவும், போதுமான தொழிலாளர் இந்த கவுன்சிலில் இல்லாததால், கவுன்சில் ஐசிஎஃப் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. எனவே தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்று மஸ்தூர் யூனியன் நீதிமன்றத்தை நாடியிருந்தது. இதே கோரிக்கையுடன் திமுக ஐசிஎஃப் தொழிலாளர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் 2011ல் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. ஆனால் இந்த மனு ஒற்றை நீதிபதி கொண்ட அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து திமுக மேல் முறையீடு செய்திருந்தது. அதை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சங்கம் வைப்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை என்று கூறியுள்ளது. மேலும், சங்கத்திற்காக ரகசிய வாக்கெடுப்பை நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என ஐசிஎஃப் பொது மேலாளர் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு சங்கம் அமைக்க போராடியபோது எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது ஐசிஎஃப்-ல் சங்கம் வேண்டும் என்று கோரி நீதிமன்றம் சென்று வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார்












Click it and Unblock the Notifications