கனிமொழி எம்.பி. பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் கிஃப்ட்! மாற்றியோசித்த திமுக மகளிரணி பிரமுகர்!
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யின் பிறந்தநாளுக்காக அக்கட்சியின் மகளிரணி பிரமுகர் அம்மு ஆன்றோ என்பவர், ஸ்பெஷல் சேலை ஒன்றை பிரத்யேகமாக உருவாக்கி பரிசளிக்கவுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் சேலையானது இப்போது தான் மகளிரணியை சேர்ந்த அம்மு ஆன்றோவிடம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள கனிமொழி உருவம் பொறிக்கப்பட்ட சேலை குஜராத்தில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி எம்.பி.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யின் பிறந்தநாள் வரும் ஜனவரி மாதம் 5ஆம் தேதி வருகிறது. இதனை மகளிரணி நிர்வாகிகளும், கனிமொழி ஆதரவாளர்களும் இப்போதே கொண்டாட தயாராகிவிட்டனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த திமுக மகளிரணி பிரமுகர் அம்மு ஆன்றோ என்பவர், கனிமொழியின் முழு உருவம் பொறிக்கப்பட்ட சேலையை குஜராத்தில் பிரத்யேகமாக ஆர்டர் கொடுத்து வாங்கியிருக்கிறார்.

3 மாதங்கள்
இந்த சேலையின் முந்தானையில் கனிமொழியின் முழு உருவப் படம் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி ஆகியோர் படங்களும், அண்ணா அறிவாலயத்தின் படமும் அந்த சேலையில் இடம்பெற்றுள்ளது. கடந்த அக்டோபர் மாதமே இதற்கான ஆர்டரை கொடுத்துவிட்டார் மகளிரணி பிரமுகர் அம்மு ஆன்றோ. மூன்று மாதங்கள் கழித்து இந்த பிரத்யேக சேலை இப்போது தான் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றியோசி
கனிமொழி பிறந்தநாளுக்கு வித்யாசமான முறையில் பரிசளிக்க வேண்டும் என விரும்பிய அம்மு ஆன்றோ, மாற்றியோசித்து அதற்கு செயல்வடிவமும் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உருவங்களை பட்டு நூலிழையால் நெய்து, பிரத்யேக பட்டுச்சேலையை உருவாக்கி கவனம் ஈர்த்திருந்தார் மறைந்த சற்குணப் பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன்.

விலை விவரம்
கனிமொழி உருவம் பொறிக்கப்பட்ட பிரத்யேக சேலையின் விலை குறித்த விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. திமுக மகளிரணி நிர்வாகிகள் மத்தியில் இந்த சேலையின் படங்கள் வேகமாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications