சில்லு சில்லாக உடையும் 200 தொகுதி திமுக கனவு? சிறுபான்மை வாக்கு வங்கி யாருக்கு? கசிந்த ரகசிய கணக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் மீண்டும் கூட்டணி கணக்குகள், சீட் பங்கீடு, அதிகாரப் பகிர்வு போன்ற கேள்விகளால் சூடுபிடித்து வருகிறது. அதிலும் கடந்த தேர்தல்களில் இல்லாத அளவுக்கு இந்த முறை பரபரப்புகளும், கணிப்புகளும் அதிகரித்து காணப்படுகின்றன.. அந்தவகையில், ஒரு முக்கிய தகவல் ஒன்று தவெக-திமுக தரப்பில் றெக்கை கட்டி பறந்துகொண்டிருக்கிறது.

இந்த முறை அதிகமாக அரசியல் களத்தில் பேசப்பட்டு வரும் விஷயம், காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கைகள்தான். 80-க்கும் மேற்பட்ட தொகுதிகள் வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், ஆட்சியில் பங்கும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் காங்கிரஸ் வெளிப்படையாக முன்வைத்துள்ளது.

DMK Vijay Minority Vote Bank Tamil Nadu Election 2026 TN Election Special 2026

ஆனால் திமுக தரப்பு இதற்கு தெளிவான சம்மதம் அளிக்காததால், இரு கட்சிகளுக்கும் இடையில் உள்ள உட்புற மனக்கசப்பு வெளிப்படையாக தெரிய தொடங்கியுள்ளது.

திமுக 200 தொகுதி

திமுகவின் கணக்கு வேறு மாதிரி இருக்கிறது. கடந்த தேர்தல் அனுபவங்களை வைத்து பார்த்தால், குறைந்தபட்சம் 120 இடங்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் திமுக உறுதியாக உள்ளது.

கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கினால் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படும் என்ற அச்சமும் திமுகவுக்கு உள்ளது.. மற்றொருபுறம் காங்கிரஸின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால், வாக்குகள் சிதறுவதுடன், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் வாக்கு வங்கியை ஒருசேர இழக்க நேரிடும் என்பதையும் திமுக உணர்ந்துள்ளது.

இந்த இரு கட்சிகளுடனான இழுபறியைதான் தவெக சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.. அதாவது கரூர் சம்பவத்திற்கு முன்பிருந்தே காங்கிரசுடன் கூட்டணி வைக்க தவெக விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது..

தவெக விஜய் வருகை

ராகுல் காந்தி, பிரவீன் சக்கரவர்த்தி போன்றோருடன் விஜய் தொடர்பில் இருந்து வரும் நிலையில், 70 சீட்கள், 6 அமைச்சர் பதவிகள், 1 துணை முதல்வர் பதவி போன்ற முன்மொழிவுகள் காங்கிரஸுக்கு வைக்கப்பட்டதாகவும் செய்திகள் பரபரத்தன.

இதற்கு காரணம், தேசிய கட்சியுடன் இணைவது விஜய்க்கும் அரசியல் பரபரப்பை விரிவுபடுத்தும் வாய்ப்பாக இருக்கும் என்பதுடன், காங்கிரஸின் சிறுபான்மை ஓட்டுக்களும் தவெகவுக்கு சிந்தாமல் கிடைக்கும் என்றும் கணக்கிடப்படுகிறதாம்.. இந்த யூகங்களுக்கு நடுவில் மேலும் சில தகவல்களும் பரபரத்து காணப்படுகின்றன..

டபுள் சேலஞ்ச்

அதாவது, 234 தொகுதிகளிலும் திமுக தரப்பில் எடுத்த ஒரு ஆய்வில், திமுகவுக்கே 200 தொகுதிகள் சாதகம் என்று ரிப்போர்ட் வந்துள்ளதாம்.. ஆனால், விஜய்யின் வருகை, திமுகவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளதாம்..

அதாவது, விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் அவருக்கு பெருவாரியாக கிடைக்க வாய்ப்புள்ளது, பல சர்ச்களில் அவருக்கு வாக்களிக்குமாறு கூறப்படுவதாகவும், இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் தவெகவுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்..

சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு

சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு கிடைப்பதே வழக்கமாக உள்ள நிலையில், இந்த முறை இந்த கணிப்பு லேசாக மாறும் என தெரிகிறது.. அதனால்தான், தவெக-வுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளை கண்டறிந்து, அங்கு புதிய வியூகங்களுடன் கூடுதல் கவனம் செலுத்த திமுக திட்டமிட்டுள்ளதாம்..

ஏற்கனவே காங்கிரஸுடன் திமுகவுக்கு இழுபறி உள்ளபோது, குறுக்கே வந்துள்ள விஜய்யின் வருகையும் டபுள் சேலஞ்சிங்காக திமுகவுக்கு உருவெடுத்துள்ளது.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+