ஆரம்பமே சொதப்பல்.. திமுகவுடன் இணையும் புது கட்சி.. உருவாகிறதா "அசுர பலம்" கூட்டணி.. அதிரும் கோவை பாஜக
சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசன் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்? எந்த தொகுதியில் களமிறங்க போகிறார்? என்ற ஆர்வம் எழுந்து வரும் நிலையில், திமுகவின் கூட்டணி முடிவும் என்னவாக இருக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எம்பி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன... அதேநேரம் ஒவ்வொரு கட்சியின் பிரபலங்களும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை குறிவைத்து வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள்... இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் களப்பணியும் அதிகரிக்க துவங்கிவிட்டது.

திமுக: எப்படியும் இந்த முறை திமுக கூட்டணியுடன் இணைந்தே மய்யம் தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதற்கு காங்கிரசும் பெருத்த துணையாக இருக்கும் என்று கணக்கு போடப்பட்ட நிலையில், இந்த கணக்குகள் டமார் என நொறுங்கிவிடும் போல தெரிகிறது. காரணம், பெங்களூருவில் அன்று எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்திற்கு, அழைப்பு விடுக்கப்படவில்லை என்றதுமே கமல் அப்செட் ஆகிவிட்டாராம்.
அதனால்தான், கோவை, மதுரை, தென் சென்னை ஆகிய 3 லோக்சபா தொகுதிகளை, எந்த கூட்டணி தருகிறதோ, அதனுடன் கூட்டணி அமைக்கும் முடிவுக்கு கமல் வந்துள்ளதாக, அன்றே செய்திகள் பரபரத்தன. அதேசமயம், தென் சென்னை, கோவை ஆகிய 3 தொகுதிகளையும் மநீம குறிவைத்துள்ள நிலையில், இந்த இடங்களை எந்த கூட்டணி தரப்போகிறதோ, அங்கே கூட்டணி என்ற முடிவிலும் மநீம உள்ளதாக சொல்கிறார்கள்.
தென்சென்னை: எனினும், இதில், தென் சென்னை தொகுதியில், கமல் களமிறங்கலாம் என்று செய்திகள் அதிகம் வந்தன.. காரணம், கடந்த லோக்சபா தேர்தலில் மய்யம் சார்பில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜன், 1.20 லட்சம் ஓட்டுக்களை இதே தென்சென்னையில்தான் பெற்றிருந்தார். அதேபோல சட்டசபை தேர்தலிலும், கணிசமான ஓட்டுக்களை இங்கு மய்யம் பெற்றுள்ளது.. அதனால்தான், தென்சென்னை தொகுதியை குறிவைத்து, கமலின் தேர்தல் வேலை நடப்பதாக கூறப்பட்டது.
அதற்காக, வாக்குகள் பெரும்பாலும், கமலுக்கே குவியும் என்று எதிர்பார்க்க முடியாது.. அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு சமமான வாக்கு வங்கி இந்தத் தொகுதியில் உள்ளதையும் நாம் மறுக்க முடியாது. ஆனால், இப்போது, வேறு ஒரு தகவல் கசிந்து வருகிறது.
கமலை பொறுத்தவரை, சட்டசபை தேர்தலுக்கு பிறகு, அரசியல் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடாமல், சினிமாவில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.. ஷூட்டிங் பணிகளுக்காக, ஒரு மாதத்திற்கும் மேலாக, அமெரிக்காவில் தங்கியிருந்த கமல், 4 நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.. ஊர்திரும்பியதுமே, சூட்டோடு சூடாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்..
கூட்டணி கட்சிகள்: அப்போது, கடந்த சட்டசபை தேர்தலில், கோவை தெற்கில் தோற்றது தன்னை மிகவும் பாதித்துவிட்டதாகவும், அதனால், வரும் எம்பி தேர்தலில் நிச்சயம் வென்று காட்டுவேன்.. அதனால், கோவை லோக்சபா தொகுதியில் ஓட்டுச்சாவடி கமிட்டிகளை அமைத்து, தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்..
கோவை தொகுதியில் கமலின் ஆர்வம் அதிகரித்திருப்பதால், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் நெருங்கி கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.. அத்துடன் திமுக கூட்டணியில் கோவையை பெறுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருப்பதாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சொல்கிறார்கள்.
விஜயகாந்த்: கமலின் இந்த தீவிரத்துக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. கடந்த முறை தேர்தலின்போது, ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் உள்ள தொகுதிகளில், கணிசமான வாக்கு சதவீதத்தை மய்யம் பெற்றிருந்தது.. ஆனால், கட்சியை ஆரம்பித்து போட்டியிட்ட முதல்தேர்தலிலேயே, அன்று விஜயகாந்த் வெற்றி வாகை சூடி, சட்டசபைக்கு சென்றார்.
ஆனால், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தோல்வி அடைந்தால், கமல் கடும் விரக்திக்கு போனதாகவும், அதனால்தான், இந்த முறை, விட்டத்தை பிடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
கோவை கமல்: அதுமட்டுமல்ல, மேல்மட்ட அரசியலைவிட்டு, கீழே இறங்கி, பட்டிதொட்டி, கிராமப்புறங்களில் எல்லாம் முழு கவனத்தை, செலுத்தவும், மய்யம் தயாராகி விட்டதாம். அந்தவகையில், கமலின் அரசியல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதுடன், திமுக கூட்டணியும், அசுர பலத்தை எட்டிப்பிடித்து வருவதாக தெரிகிறது.. ஒருவேளை கோவையில் கமல் போட்டியிடுவது உறுதியானால், பாஜக சார்பில் யார் களமிறங்க போகிறார்கள்? என்ற ஆர்வம் எகிறி வருகிறது.
காரணம், அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்ட கொங்குவில், பாஜகவின் பலம் கூடிவருகிறது. மற்றொருபக்கம், திமுகவின் கொங்கு புள்ளிகள், தொடர்ந்து டார்கெட் செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு நடுவில், அண்ணாமலையின் எழுச்சி பயணமும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
பார்முலா: அதுமட்டுமல்லாமல், எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பதில் திமுகவின் முக்கியத்துவத்தை குறைக்கவும், கூட்டணி பார்முலாவை நொறுக்கவும், பாஜக தீவிரம் காட்டி வரும்நிலையில், கொங்குவில் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. கொங்குவை தன்வசமாக்க கடந்த 3 வருடங்களாகவே, திமுக மேலிடம் முயன்று வரும்நிலையில், தற்போது அதற்கான நெருக்கடிகளையும் பாஜக ஏற்படுத்தி உள்ளதையும் மறுக்க முடியாது..
எனவே, கூட்டணி கட்சிக்கு கோவையை ஒதுக்குமா? அல்லது நேரடியாகவே களமிறங்கி பாஜக அதிமுக கூட்டணிக்கு பதிலடி தரப்போகிறதா? என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்
-
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன்












Click it and Unblock the Notifications