Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைவிட்ட பாஜக.. கை வைத்த ஸ்டாலின்.. அவருக்கு கோடநாடு, இவருக்கு புளியந்தோப்பு.. சிக்கலில் தலைவர்கள்

அடுத்தடுத்து அதிமுக தலைவர்கள் சிக்கலில் சிக்கி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்தடுத்த பிரச்சனைகளில் அதிமுக மேலிடம் சிக்கி வருகிறது.. கொடநாடு விவகாரம், புளியந்தோப்பு கட்டிடம் என இரு முக்கிய விவகாரங்களை திமுக கையில் எடுத்துள்ளது.. இதில் இருந்து அதிமுக எப்படி மீண்டு வரும் என்பதும் எதிர்பார்ப்பாக கிளம்பி உள்ளது.

Recommended Video

    MK Stalin விளக்கம்! kodanad விவகாரத்தில் அரசியல் தலையீடா? | Oneindia Tamil

    ஆட்சி அமைத்து 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் திமுக, தன்னுடைய அதிரடியை காட்ட துவங்கியது.. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணியை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக கண்டனம் தெரிவித்தது.

    ஆனால், அதிமுக மேலிடத்தையே அசைத்து பார்க்கும்படியாக, கொட நாடு விவகாரத்தை தூசி தட்டி உள்ளது திமுக அரசு.. கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்ததாக முக்கிய குற்றவாளியான சயன் தெரிவித்ததுமே தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டது.

    5 பேர்

    5 பேர்

    இந்த வழக்கை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபட்டாலும், ஓபிஎஸ், வேலுமணி என 5 முக்கிய மாஜிக்களுக்கு சிக்கல் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தை பெரிதாக்கினார்.. நேற்று சட்டசபையை புறக்கணித்தார்.. தர்ணாவிலும் அதிமுகவினருடன் ஈடுபட்டார்.. திமுகவை கண்டித்து காரசாரமாக பேட்டியும் தந்தார்...

    ஆளுநர்

    ஆளுநர்

    அப்போதும் கலக்கம் தீராமல், அவசர அவசரமாக ஆளுநரை சென்று முக்கிய தலைவர்கள் சந்தித்துள்ளனர்... திமுக எங்களை பழிவாங்குகிறது என்று புகாரும் தந்தனர்.. எப்பவுமே சிரித்து கொண்டே பேசும் எடப்பாடி பழனிசாமி கொடநாடு விவகாரம் கிளம்பியதில் இருந்து இப்போதுவரை அப்செட்டில் உள்ளதாகவே இருப்பதாக தெரிகிறது.

    பதற்றம்

    பதற்றம்

    அதற்குள் இன்றைய தினம் ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.. நேற்றைய தினம் இந்த கட்டிடத்திற்கு அமைச்சர்கள் தா.மோ. அன்பரசனும், சேகர்பாபும் நேரில் சென்றபோதே ஓரளவு விஷயம் புரிந்துவிட்டது.. செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இவ்விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தனர். அதற்கேற்றபடி, புளியந்தோப்பு கட்டிட விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் வலியுறுத்தி உள்ளது மிகுந்த பரபரப்பை கூட்டி உள்ளது.

    ராஜேந்திர பாலாஜி

    ராஜேந்திர பாலாஜி

    கொடநாடு விவகாரத்தை பொறுத்தவரை, ஸ்டாலினுக்கு ஹைகோர்ட் கடிவாளம் போட்டாகிவிட்டது என்றுதான் அதிமுக மேலிடம் நினைத்தது.. ஆனால் திமுக அரசோ, இரட்டிப்பு வேகத்தோடு இந்த வழக்கின் விசாரணையை தொடங்கும் என்று எடப்பாடி பழனிசாமி கொஞ்சமும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.. தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதிமுக தலைமையிடம் சொல்லலாம்.. ஆனால், இவர்களுக்கே பிரச்சனை உள்ளதே என்று நினைத்தாரோ என்னவோ, ராஜேந்திரபாலாஜி ஸ்டிரைட்டாக சுப்ரீம்கோர்ட்டுக்கே போய்விட்டார்.. இவர்மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது..

    விதிமுறைகள்

    விதிமுறைகள்

    இந்த வழக்கை விதிமுறைகளை பின்பற்றாமல் சென்னை ஹைகோர்ட் விசாரிக்கிறது என்று தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக போடப்பட்ட வழக்கு அது.. பால்வள துறையில் முறைகேடு செய்திருந்தாலும், இந்த வழக்கில்தான் ராஜேந்திர பாலாஜி சிக்க போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளது, திமுக அரசு மீதான பயத்தையே வெளிப்படுத்தி உள்ளது..

    அரசியலா?

    அரசியலா?

    எடப்பாடி பழனிசாமி ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தில் நம்பிக்கையாக இருந்தார்.. அதன்படி, அதிமுகவில் மற்றவர்கள் சிக்குவார்களே தவிர, தலைவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை பாயாது என்று நினைத்திருந்தார்.. அதனால்தான், பீதியில் இருந்த மாஜிக்களுக்கே தைரியம் சொல்லி கொண்டிருந்தார்.. இப்போது, ஸ்டாலின் நேரடியாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தலையில் கைவைத்துவிட்டார்.. இது இயற்கையாக நடந்ததா? அரசியலா என்பது உறுதியாக தெரியாது...

    கேள்வி

    கேள்வி

    ஆனால் ஓபிஎஸ்-இபிஎஸ் சிக்கலில் சிக்கியுள்ளதில், அவர்களிடம் ஒருவித பதற்றத்தை காண முடிகிறது... நேற்றைய தினம் பேரவை புறக்கணிப்பு, தர்ணா முதல் முன்பு ஆளுநர் சந்திப்பு வரை அதைத்தான் வெளிச்சம் போட்டு காட்டுகிறது... இதில், தனியார் தொலைக்காட்சிகள் செய்தியால் தனியாக சிக்கிக்கொண்ட ஓபிஎஸ் என்ன செய்யப்போகிறார் என்பது அனைவரது கேள்வியாக உள்ளது...

    டெல்லி

    டெல்லி

    இதில் இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடக்கப்போகும் விளைவுகளை உணர்ந்துதான், டெல்லியின் பாதுகாப்பை கேட்டு, அதிமுக மேலிடம் தூது சென்றதாகவும் கூறப்படுகிறது.. ஆனால் சில அமைச்சர்களின் ஊழல், சொத்துக்குவிப்புக்கு பாஜக உதவியாக இருந்ததாக ஒரு எண்ணம் தமிழக மக்களிடம் உள்ளது.. அத்துடன் வேலுமணி ரெய்டு விவகாரத்திலும் சப்போர்ட் செய்து தன்னுடைய எதிர்ப்பை காட்டியது..

    கோபம்

    கோபம்

    இந்த கோபமும் மக்களிடம் உள்ளதை பாஜக மேலிடம் நன்கு அறிந்துள்ளது.. அதனால்தான், அதிமுக மேலிட பிரச்சனைகள் தொடர்பாக யாரும் உதவ கூடாது என்று பாஜக மேலிடம் கைவிட்டுவிட்டதாக தெரிகிறது... இப்போது பாஜகவும் கைவிட்ட நிலையில் அதிமுக என்ன செய்ய போகிறது? ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் தங்களை எப்படி குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க போகிறார்கள்? திமுக அடுத்து என்ன செய்யும்? என்பதெல்லாம் எதிர்பார்ப்பாகவே உள்ளது.. பார்ப்போம்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+