பெண் எம்பியிடம் செருப்படி வாங்கியவர் திருச்சி சிவா.. காமராஜர் கருத்தால் கொதித்த திருச்சி வேலுசாமி
சென்னை: காமராஜர் குறித்து திமுகவின் ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. திருச்சி சிவாவை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் திருச்சி சிவா ஒரு முட்டாள். அவர் பெண் எம்பியிடம் செருப்படி வாங்கியவர் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கடுமையாக அட்டாக் செய்துள்ளார்.
திமுகவின் ராஜ்யசபா எம்பியாக இருப்பவர் திருச்சி சிவா. இவர் காமராஜர் பற்றி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளார். திருச்சி சிவாவின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் திருச்சி சிவாவை, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி மிகவும் காட்டமாகவும், கடுமையாகவும் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக திருச்சி வேலுச்சாமி கூறியதாவது:
தமிழ்நாட்டின் களங்கம், சாபம் என்னவென்றால் இப்படிப்பட்ட பைத்தியக்காரன் (திருச்சி சிவாவை குறிப்பிடுகிறார்)எல்லாம் டெல்லியில் 20 ஆண்டு காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது தான். அந்த ஆளு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர் எங்கள் ஊர்க்காரர் தான்.
திமுக ஆட்சியில் 1976 ஜனவரி 9ல் டிஸ்மிஸ் ஆகிறது. 1975 ஜூன் 25ல் எமர்ஜென்சி வருகிறது. இரண்டுக்கும் இடையே அப்புறம் 6, 7 மாதம் திமுக தான் ஆட்சியில் இருந்தது. அப்போது ஆட்சியை காக்க திமுகவினர் காலில் விழ தயாராக இருந்தனர். இந்த பைத்தியக்காரர் என்ன சொல்கிறார் என்றால் தமிழ்நாடு முழுவதும் காமராஜருக்காக தான் ஏசி வைத்தார்கள் என்கிறார்.
டேய் முட்டாள்.. ரஷ்யா போகும்போது கூட சாதாரண கதர் வேட்டி, கதர் சட்டையில் போய்விட்டு வந்த ஒரே ஒரு உலக தலைவன் காமராஜர் தான். மேனா மினுக்கி அரசில் செய்தவருக்கு காமராஜரை பற்றி என்ன தெரியும். ஒன்றுமே புரியாமல் ஏன் உளறுகிறார் என்று தெரியவில்லை. காமராஜர் அக்டோபர் 2ம் தேதி இறக்கிறார். கடைசி 2 மாதம் அவருக்கு உடல்நலம் சரியில்லை. யாரும் வீட்டை விட்டு வெளியே போகவில்லை. அப்போது கருணாநிதி கையை பிடித்து கொண்டு ஜனநாயகத்தையும், நாட்டையும் நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று இந்த நபர் சொல்கிறார்.
அப்படியென்றால் கருணாநிதி, காமராஜர் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும். அது எப்போதாவது நடந்து உள்ளதா? கற்பனையிலேயே பல விஷயங்களை விற்பனை செய்யும் இந்த புத்தியை எப்போது விடப்போகிறார் என்று தெரியவில்லையே? நான் நல்ல மனுஷங்களுக்கு பதில் சொல்லலாம். ஆனால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெண் எம்பி காலில் இருந்த செருப்பை கழட்டி அடித்தபோது எதிர்த்து வார்த்தை பேசாமல் குனிந்து கொண்டே வந்த ஒரு நாலாந்தர மனிதரிடம் இதை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது'' என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications