பி.எப் கணக்கில் இருந்து அட்வான்ஸ் எடுக்குறீங்களா? இந்த தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க.. வெளியான அட்வைஸ்
சென்னை: பிஎப் கணக்கில் இருந்து பணம் எடுப்பது தொடர்பான சில முக்கியமான அறிவுறுத்தல்களை சந்தாதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வழங்கியுள்ளது. இது தொடர்பான இபிஎப் ஓ நிறுவனம் வெளியிட்ட அறிவுறுத்தல்களை விவரமாக பார்க்கலாம்.
அமைப்புசார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎப் ஊதியத்தில் இருந்து பிடிக்கப்பட்டு வருகிறது. ஊழியரும், வேலை கொடுக்கும் நிறுவனத்தினரும் இதில் குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்த வேண்டும். ஊழியர்களின் அவசர கால தேவை மற்றும் ஓய்வு காலத்தில் மிகச்சிறந்த சேமிப்பாக இந்த வருங்கால வைப்பு நிதி உள்ளது.

நிதி சேவை நிறுவனங்கள்
வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் திருமணம், கல்வி, மருத்துவ செலவு உள்ளிட்டவற்றுக்காக தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை ஆன்லைன் மூலமாக எடுத்துக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதியத்தின் இணையத்தில் வங்கி கணக்கு போல பயனர்கள் தங்கள் ஐடி எண்ணை கொடுத்து பிரத்யேகமாக அக்கவுண்டை பாராமரித்துக்கொள்ள முடியும்.
இந்த சேவையை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது. இதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை. பி.எப் கணக்கில் இருந்து பணம் எடுக்க சில சந்தாதாரர்கள் பிரவுசிங் செண்டர், சேவை மையங்களை தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக பெறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால், பல இணையதள நிறுவன செயல்பாட்டாளர்கள் மற்றும் நிதி சேவை நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குவதற்கு பெரும் தொகையை வசூலிப்பது தெரியவந்துள்ளது.
விழிப்புடன் செயல்பட வேண்டும்
இதனால், இது தொடர்பான முக்கிய அறிவுறுத்தலை பிஎப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, சந்தாதாரர்கள், வீட்டில் இருந்தபடியே இலவசமாக இந்த சேவையை பெறலாம்: இந்த சேவைக்காக நிதி சேவை நிறுவனங்கள் அல்லது ஏஜெண்டுகளை சந்தாதாரர்கள் அணுக வேண்டாம் என்று வருங்கால வைப்புநிதி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், 'இந்த சேவையில் ஈடுபடும் தனியார் நிதி சேவை நிறுவனங்கள், வருங்கால வைப்பு நிதியால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், இதனால், நிதிச்சேவை நிறுவனங்கள் மூலம் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து சந்தாதாரர்கள் பணம் எடுக்கும்பட்சத்தில் அவர்களின் நிதி தொடர்பான தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வெளிப்படுத்தக்கூடும் அபாயம் உள்ளது. எனவே, சந்தாதாரர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்" என்று சந்தாதாரர்களை அறிவுறுத்தியுள்ளது.
ஏடிம்மில் பணம் எடுக்கும் வசதி
சந்தாதார்ரக்ள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணத்தை திரும்ப எடுப்பதில் உள்ள சிரமங்களை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை பி.எப் நிறுவனம் எடுத்து வருகிறது. அந்த வகையில், வரும் ஜூலை 1 முதல் ஏடிஎம் வாயிலாக பிஎப் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, பிஎப் கணக்கில் எவ்வளவு என்பதை எஸ்.எம்.எஸ் மூலமாக அறிந்து கொள்ளும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.
பி.எப் கணக்கில் முன்பெல்லாம் பணம் எடுக்க வேண்டும் என்றால் கணக்கில் முன்கூட்டியே முன்பணம் வேண்டும் என்றால் 3 நாட்களில் எடுத்துக் கொள்ளலாம். திருமணம், கல்வி, வீடு கட்டுவதற்கு என பிஎஃப் தொகையிலிருந்து முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications