அவர் இங்கே இல்லை....இயேசு தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்!
சென்னை: இயேசு சிலுவையில் மரித்தபின்பு, கன்மலையில் வெட்டியிருந்த ஒரு புதிய கல்லறையில் வைத்து, யூத போர் சேவகரும் அங்கு காவலுக்கு வைக்கப்பட்டுயிருந்தனர். அவர் (இயேசு) மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது (அப்போஸ்தலர் 2:24) என்ற வேத வாக்கியம் நிறைவேறிற்று. எந்த அரசாங்க சட்டங்களும், அரசாங்க முத்திரையும் அவரை கல்லறையில் அடக்கி வைக்க முடியவில்லை. இயேசு தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். இயேசு நமக்காக சிலுவையில் மரித்து, பாதாளத்தையும், மரணத்தையும், பிசாசை ஜெயித்து, மூன்றாம் நாள் உயிரோடே எழுந்தார். கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கிய பண்டிகையாக பார்க்கப்படுகிற ஒன்று, இயேசுவின் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை.

கிறிஸ்தவத்தின் ஆதாரம்
கிறிஸ்தவத்தின் முதுகெலும்பும், அடிப்படை சத்தியமும், இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுததில் தான் இருக்கிறது, இன்றைக்கும் இயேசு ஜீவிக்கின்றார். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால் கிறிஸ்தவம் இல்லை, கிறிஸ்தவனும் இல்லை, கிறிஸ்துவ வாழ்க்கையும் இல்லை. இயேசு கிறிஸ்து நமக்காக பூமிக்கு வந்தது சரித்திரம், மரித்து உயிர்தெழுந்ததும் சரித்திரமே. உலக வரலாற்றில் இயேசு உயிர்தெழுந்ததை உண்மை என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உயிர்த்தெழுந்த பின்பு 40 நாள் அப்போஸ்தலருக்கும் மற்றும் தன்னுடன் கூட இருந்தவர்களுக்கு அவர் தரிசனமானார்.
நானே ஜீவன்
ஒரு ஜீவனுள்ள மனிதனை கொலை செய்யலாம், ஆனால் ஜீவனையே கொலை செய்ய முடியுமா? முடியாது ஏன்னெனில், லாசரு மரித்து அவன் கல்லறையின் அருகே வந்தபோது, இயேசு இந்த வேத வசனத்தை கூறினார் (யோவான் 11:25) இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், என்றார். லாசரு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு கல்லறையில் வைக்கப்பட்டுயிருந்தது "லாசருவே வெளியே வா" என்று சொல்லி அவனை உயிரோடே எழுப்பினார். உயிர்த்தெழுதல் ஒரு சம்பவம் மட்டும் அல்ல, உயிர்த்தெழுதல் என்பது ஒரு நபர், அவருடைய பெயர் "இயேசு கிறிஸ்து". "நானே உயிர்தெழுதல்" என்று அவரை குறித்து சாட்சி கூறியிருக்கிறார்.
கல் புரட்டப்பட்டது
ஓய்வுநாள் அன்று அதிகாலையில் மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், மற்றும் சில ஸ்திரீகளும், இயேசுவுக்கு சுகந்த வர்கம் வைப்பதற்காக கல்லறைகயை பார்க்க வந்தார்கள். அங்கே அவர்கள் இயேசுவுடைய கல்லறையில் கல் புரட்டப்பட்டு, அதின் மேல் தேவ தூதன் உட்காந்திருப்பதை கண்டார்கள். மரியாள் மிகவும் பயந்து, இயேசுவின் சரீரத்தை கல்லறையில் இல்லை என்று கண்டபோது, அந்த தூதன், அவர் இங்கே இல்லை, அவர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் என்றும், தூதன் கூறியதை கண்டு, அவர்கள் மிகவும் பயத்தோடும், மகிழ்ச்சியோடும், புறப்பட்டு சீஷர்களுக்கு அறிவிக்க போனார்கள். நம் வாழ்விலும் கூட பலவிதமான தடை கற்கள் நம்மை முன்னேறிச்செல்ல விடாமல் இருப்பதை பார்க்கலாம், அவருக்குள் இருந்த அந்த ஜீவன் எப்படி கல்லறையின் வாசலில் கல் புரட்டப்பட்டு இருந்ததோ, நாம் அந்த ஜீவனுள்ள தேவனை விசுவாசித்தால் நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிற தடை கற்கள் புரட்டப்படும்.

இரட்சிப்பு எப்படி வந்தது?
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இல்லை என்றால், மனிதகுலத்திற்கு இரட்சிப்பு இல்லை. அவர் உயிர்த்தெழுந்தபடியால், நம் எல்லோருக்கும் இரட்சிப்பு உண்டு. (ரோமர் 10:9,10) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும் என்ற வேத வாக்கியம் நிறைவேறும். எனவே, இருதயத்தில் விசுவாசித்து, வாயினாலே அறிக்கை பண்ணினால் போதும் எந்த மனுஷனும் இரட்சிக்கப்படுவான்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications