"அந்த" நாள் மட்டும் ரேஷன் கடை பக்கம்.. எட்டி கூட பார்த்துடாதீங்க.. மக்களுக்கு அரசு போட்ட ஆர்டர்!
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் சிறப்பாக இயங்கி வருகிறது. அரிசி, பருப்பு ஆகியவை மலிவான விலையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் முக்கியமான அறிவிப்பு ஒன்று ரேஷன் கடைகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுக்க உள்ள ரேஷன் கடைகளில் சிதிலம் அடைந்த பழைய ரேஷன் கடைகளை உடனே மூட வேண்டும். புதிய கடைகளை கட்ட வேண்டும். தற்காலிகமாக கிராம மண்டபங்களில் ரேஷன் கடைகள் இயங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பழைய ரேஷன் கடைகளை உடனே புனரமைக்க வேண்டும் என்ற உத்தரவு அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படி ரேஷன் கடைகள் சிறப்பாக வரும் நிலையில்தான் ரேஷன் கடைகள் குறித்த முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி ரேஷன் கடைகளின் விடுமுறை தினம் மாற்றப்பட்டு உள்ளது. இந்த மாதம் 17ம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு ரேஷன் கடைகளில் விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது இது 18ம் தேதியாக மாற்றப்பட்டு உள்ளது. இதற்கான காரணம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி ரேஷன் கடைகள் 17ம் தேதி சனிக்கிழமை இயங்கும். ஆவணி மாத அமாவாசையில் இருந்து 4 நாட்களில் சதுர்த்தி திதி கொண்டாடப்படும்.
அன்றுதான் விநாயகர் சதுர்த்தி. ஆவணி அமாவாசை 14ம் தேதி வருகிறது. அதனால் 18ம் தேதி இந்த முறை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். அதனால், அதே நாளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படும். இதனால் மக்கள் செப்டம்பர் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வேறொரு முக்கிய அறிவிப்பு: இது போக தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி விற்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ள
அதில், அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் -1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980-ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 01.07.2023 முதல் 31.07.2023 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.49,40,516/- (ரூபாய் நாற்பத்தொன்பது லட்சத்து நாற்பதாயிரத்து ஐந்நூற்று பதினாறு மட்டும்) மதிப்புள்ள 3610 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 181 எரிவாயு உருளைகள், 1161 கிலோ கோதுமை, 1710 கிலோ துவரம்பருப்பு, 2140 லிட்டர் மண்ணெண்ணெய், 36 பாக்கெட் பாமாயில் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications