இதெல்லாம் அந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு தெரியுமா? மறைக்கப்பட்ட சீக்ரெட்! அமைச்சர் டேபிளுக்கு போனா என்னாகும்
சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் உயர் கல்வித்துறையின் செயலாளர் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ். தலைமையில் சமீபத்தில் நடந்தது. இந்த மீட்டிங்கில் நடந்த சம்பவங்கள் அரசியல் உலகில் விவாதம் ஆகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் அதிக அளவில் மாற்றப்பட்டு வருகின்றனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஜவுளித்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மீன்வளத்துறை மேலாண் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கெஜலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். திருநெல்வேலி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஈரோடு வணிகவரி இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
அதிகாரிகள் மாற்றம்: அறநிலையத்துறை ஆணையராக இருந்த முரளிதரன் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அதேபோல் சமீபத்தில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்று வந்த சுப்ரியா சாஹு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், பல உயர்மட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று மாநில அரசால் இடமாற்றம் செய்யப்பட்டனர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் தலைவராக இருந்த மற்றொரு பிரபல மூத்த அதிகாரி ககன்தீப் சிங், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறையை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரதீப் யாதவ் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்களில் இருந்து உயர்கல்விக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் உயர் கல்வித்துறையின் செயலாளர் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ். தலைமையில் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், பல்கலைக் கழகத்தோடு இணைவுப் பெற்ற (அஃப்ளியேட்டேட்) கல்லூரிகளில் ஆய்வுக்குழு சமீபத்தில் நடத்தியிருந்த ஆய்வு அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்றும், குறிப்பாக, பல்கலைக் கழகத்தின் பொறுப்பு பதிவாளர் ராமகிருஷ்ணன் மீது கல்லூரிகள் தரப்பிகிருந்து சொல்லப்பட்ட புகார்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் அந்த புகார்களை கொண்டுவரவே இல்லை. பிரதீப் யாதவ்வுக்கு தெரியாமல் புகார்களை மறைத்துவிட்டனர். அதேசமயம், பல்கலைக் கழகத்தோடு இணைவுப் பெற்ற கல்லூரிகளுக்கு ரினிவல் (தொடர் இணைவு) ஆர்டருக்கு பிரதீப் யாதவ்விடம் அனுமதி பெற்றுள்ளனர்.
மேலும், பேராசிரியர்களை இடமாற்றம் செய்யவும் அனுமதி வாங்கியுள்ளது ஆட்சி மன்றக்குழு. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூ.ஜி.சி.) நடைமுறை விதிகளுக்கு எதிராக இந்த அனுமதி பெறப்பட்டிருக்கிறது. பொறுப்பு பதிவாளரும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களும் துறையின் செயலாளர் பிரதீப்யாதவை ஏமாற்றி வருகிறார்கள்" என்கிறது பல்கலைக்கழக வட்டாரங்கள். இதற்கிடையே, இந்த விவகாரங்களை பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு (யூ.ஜி.சி.) புகார்களாக அனுப்ப பேராசிரியர்கள் தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. துறையின் அமைச்சர் பொன்முடிக்கு தெரியாமல் பல விசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications