"கொரோனாவுக்கு மத்தியில்" ஓட்டு போட போறீங்களா?.. எதையெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா நேரத்தில் வாக்களிக்க செல்வோர் பாதுகாப்பாக இருக்க என்னவெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக் கூடாது என்பது குறித்து பார்ப்போம்.
இன்று காலை 7 மணி முதல் தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது. கொரோனாவுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஒரு பக்கம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள், மறுபக்கம் வாக்களிப்பு என களைகட்டி வருகிறது. கொரோனாவுக்கு மத்தியிலும் மக்கள் ஜனநாயக கடமையாற்ற குவிகிறார்கள். நேற்று முதல் சொந்த ஊர்களில் வாக்களிக்க மக்கள் வெளியூர்களிலிருந்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள். எதுவாக இருந்தால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை நாம் மறந்துவிடக் கூடாது.
வாக்களிக்க செல்லும் போது தேவையான ஆவணங்களை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். கூடுதலாக ஒரு மாஸ்க்கை எடுத்துச் செல்வதும் நல்லதுதான்.
- கைக்குட்டைகளை எடுத்துச் செல்வதை விட டஷ்யூ பேப்பர் எடுத்துச் செல்லலாம். தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்ல வேண்டும். கையெழுத்திட அதிகாரியிடம் இருக்கும் பேனாவை எல்லோரும் பயன்படுத்துவதால் நாம் தனியாக பேனாவை கொண்டு செல்லுதல் நல்லது.
- கையுறைகளை அணிந்து செல்ல வேண்டும். சானிடைசர் கொண்டு செல்வது மிக மிக அவசியம். அதிகாரிகளிடமோ யாரிடமோ பேசும் போது மாஸ்க்கை கழற்றாமல் அப்படியே பேசுவது மிகவும் நல்லது.
- சுவர், டேபிள், சேர் உள்ளிட்டவற்றை தொடாதீர்கள். அப்படியே தொட்டுவிட்டால் சானிடைசர் அல்லது ஏதேனும் ஹேண்ட் வாஷ் கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும்.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். நம் குடும்பத்தினராகவே இருந்தாலும் இதை நாம் கடைப்பிடித்து சமூக பொறுப்பை கடைப்பிடிக்க வேண்டும்.- குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம். வீட்டிலோ அல்லது உறவினரிடமோ விட்டு விட்டு வாக்களிக்க செல்லலாம். அதிலும் நம்பகமானவர்கள் என்றால் விட்டுவிட்டு செல்லலாம். இல்லாவிட்டால் ஒருவர் குழந்தையை பார்த்துக் கொண்டு மற்றொருவர் வாக்களிக்க செல்லலாம். அவர் வந்தவுடன் குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தவர் வாக்களிக்க செல்லலாம்.
- பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். வேறு வழியில்லாவிட்டால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு பேருந்து, ரயிலில் செல்லலாம்.
வாக்களித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் அந்த ஆடையை பாதுகாப்பாக கழற்றிவிட்டு குளித்துவிட்டு வேறு ஒரு புத்தம் புதிய ஆடையை அணிந்து கொள்வது மிகவும் பாதுகாப்பானது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications