சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பச்சை, ஆரஞ்சு, சிகப்பு".. ஸ்டாலின் எடுக்க போகும் அந்த முடிவு.. யாரு சபரீசனா.. கதிகலங்கும் புள்ளிகள்

சபரீசனும், உதயநிதியும் முக்கிய யோசனையை முதல்வரிடம் தெரிவித்துள்ளனராம்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் விரைவில் முக்கிய மாற்றம் ஒன்று வரப்போகிறதாம்.. இதுகுறித்த யோசனையிலும் ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறாராம் முதல்வர் ஸ்டாலின்.

விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. தேசிய கட்சிகள் இதற்கு தயாராகி வரும் நிலையில், திமுகவும் அதற்கான முன்னெடுப்பை எடுத்து வருகிறது.. மற்றொருபுறம், பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பதிலும் ஸ்டாலின் ஆர்வம் காட்டி வருகிறார்..

அதற்குள் விரைவாக உட்கட்சி தேர்தலை நடத்தி விட வேண்டு என்பதில் திமுக மும்முரமாகி உள்ளது.. இருந்தாலும், மாவட்ட செயலாளர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுமா? இல்லையா? என்ற குழப்பமும், விவாதம் கட்சிக்குள் ஓடிக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

 முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு! முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

 ஸ்பெஷல் ரிப்போர்ட்

ஸ்பெஷல் ரிப்போர்ட்

இதனிடையே, மாவட்டங்களில் சபரீசன் மேற்கொண்ட முயற்சிகளும், அதுகுறித்த களஆய்வும், மேலிடத்துக்கு பேருதவியாக இருந்து வருவதாக தெரிகிறது.. சட்டசபை தேர்தலின்போது, திமுகவுக்காக பணியாற்றிய ஐபேக் டீம், ஒவ்வொரு மாவட்ட செயலாளர் பற்றியும், ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்டை ஆய்வு செய்து தந்திருந்தது.. இந்த ரிப்போர்ட்டின்படி, திமுகவின் வெற்றிக்காக அரும்பாடுபட்டவர்கள் யார் என்பதை சபரீசன் நன்கு அறிந்து வைத்திருந்தார்.. இதைதவிர இன்னொரு ஆய்வையும் சபரீசன் மேற்கொண்டிருந்தார்..

 பச்சை + சிவப்பு

பச்சை + சிவப்பு

அதன்படி, திமுகவின் ஆட்சியில் இதுவரை சிறப்பாக பணியாற்றிய மா.செ.க்கள் யார் என்று ஆராய்ந்து, அது பற்றின ஒரு லிஸ்ட்டும் ரெடியாகி உள்ளது.. பச்சை, ஆரஞ்சு, சிகப்பு என்ற ரீதியில் மா.செ.க்கள் அந்த லிஸ்ட்டில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த லிஸ்ட் மேலிடத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் சலசலக்கப்பட்டன. இப்போது விஷயம் என்னவென்றால், இதுகுறித்த ஒரு முக்கிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.. திமுகவின் முப்பெரும் விழாவை இன்று முடித்துவிட்டு ஸ்டாலின் சென்னை திரும்பியதும், திமுக மா.செ.க்கள் நியமனம் குறித்து சீனியர்களிடம் விவாதிக்க திட்டமிட்டுள்ளாராம்.

 டரியல் பிளான்

டரியல் பிளான்

திமுகவில் உள் கட்சித் தேர்தல் 90 சதவீதம் நிறைவடைந்து விட்ட நிலையில், மா.செ.க்கள் தேர்வு தான் அடுத்த கட்டமாக முடிவு செய்யப்படவிருக்கிறது. மா.செ.க்கள் தேர்தல் முடிந்து விட்டால், அடுத்தது மாநில தலைவர் தேர்தல் தான். அந்த வகையில், மா.செ.க்கள் தேர்வினை பரபரப்பாக நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள். இந்த முறை, 70 வயதுக்கு மேற்பட்ட மா.செ.க்களை மாற்றியமைத்து அந்த மாவட்டங்களில் இளைஞர்களை மா.செ.வாக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம், உதயநிதி தெரிவித்திருக்கிறாராம்.. அதாவது, இதற்காக, இளைஞரணியை சேர்ந்த 7-பேருக்கு வாய்ப்பளிக்கலாம் என்பதை ஒரு கோரிக்கையாக கட்சியின் தலைவரிடம் முன் வைத்துள்ளாராம்.

 சபரீசன் ஐடியா

சபரீசன் ஐடியா

அதேபோல, சபரீசனும் ஒரு யோசனையை ஸ்டாலினிடம் வைத்துள்ளாராம்.. ஏற்கனவே, மா.செ.க்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வை தான் நடத்தியிருந்த நிலையில், "சீனியர் மா.செ.க்கள் பலரும் மந்திரிகளாக இருக்கிறார்கள்.. அமைச்சர் பதவியில் அவர்கள் இருப்பதால் கட்சி பதவியிலிருந்து அவர்களை விடுவிக்கலாம்" என்று தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஸ்டாலினிடம் யோசனை தெரிவித்திருக்கிறாராம்.. உதயநிதியும், சபரீசனும் ஸ்டாலினிடம் இப்படி மாறி மாறி கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், திமுகவில் மா.செ. பதவி தான் பவர் ஃபுல் என்பதால், மா.செ. பதவியை துறக்க எத்தனை சீனியர் மந்திரிகள் உடன்படுவார்கள்? என்கிற வாத பிரதிவாதம் கட்சிக்குள் தலைத்தூக்கியிருக்கிறது.

English summary
Do Senior leaders lose one of the two positions and what decision is MK Stalin going to take
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X