சர்வேயர்கள் கிளம்பிட்டாங்க.. அப்போ நில அளவீடு, பட்டா மாறுதல் பணிகள்? தமிழக தாசில்தார்கள் முடிவு என்ன
சென்னை: "நிலம் சார்ந்த களப்பணி செய்யும் பணியாளர்களுக்கு, அலுவலக பணியாளர்களைபோல், தினமும் காலை 10:00 மணிக்கு, அலுவலக வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்ற நடைமுறைக்கு எதிர்ப்பும், அதிருப்தியும் கிளம்பியிருக்கிறது. என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களை, டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் திட்டம் துவக்கப்பட்டிருக்கிறது.. இதற்கான பணிகளை, கிராம நிர்வாக அலுவலர் வழியாக மேற்கொள்ள, தமிழக அரசு முடிவு செய்தது..

வருவாய்த்துறை: இப்பணிகளை செய்வதற்கு, மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை, கிராம நிர்வாக அலுவலர்கள் ஏற்கனவே முன்வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக, கடந்த ஜனவரி 8ம் தேதி, வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தனர்.
அப்போது, நில அளவைக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்கும், பதிவுக்கு 10 ரூபாய் வழங்குவதற்கும் அதிகாரிகள் தரப்பில் சம்மதம் தெரிவித்தநிலையில், உரிய நேரத்தில் மதிப்பூதியம் வழங்கப்படவில்லையாம். எனவே, மதிப்பூதியம் வழங்கப்படாததால், விஏஓ-க்கள் அந்த பணிகளை ஏற்கனவே புறக்கணித்திருந்தனர்.
பேச்சுவார்த்தை: பிறகு நேற்றுமுன்தினம் மீண்டும் சென்னையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் அமைப்புகளின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே, டிஜிட்டல் நில அளவை பணியை முற்றிலுமாக புறக்கணிப்பதாக, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் அதிரடியாக அறிவித்துவிட்டார்கள்.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பேயே தினமும் அலுவலகம் வர வேண்டும் என்ற தாசில்தார்களின் உத்தரவுக்கு, நில அளவை களப்பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க துவங்கிவிட்டனர்.. இது தொடர்பாக, தமிழக நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு, சென்னை மாவட்ட செயலர் பார்த்திபன், சென்னை கலெக்டருக்கு மனு ஒன்றையும் தந்துள்ளார்கள்.. அந்த மனுவில் உள்ளதாவது:
நடைமுறையில் இல்லை: "நிலம் சார்ந்த களப்பணி செய்யும் பணியாளர்களுக்கு, அலுவலக பணியாளர்களைபோல், தினமும் காலை 10:00 மணிக்கு, அலுவலக வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் நடைமுறை இல்லை. அலுவலகம் வருவதை நடைமுறைப்படுத்தினால், நில அளவை பணி பெரிதும் பாதிக்கும். களப்பணியாளர்கள் தன் பணி நேரம் முழுதும், புலத்தில் செலவிடுகிற வகையில் உள்ளது.
நிலம் மற்றும் நில அளவை பிரச்னைகள் தொடர்பாக, திங்கள் கிழமைதோறும், மக்கள் குறைதீர் கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. தினமும் மாலை 3:00 மணி முதல் அலுவலகத்தில் ஆஜராகி மக்களை சந்தித்தால், நிலம் சார்ந்த பணிகள் பெரிதும் பாதிப்படையும்.
திரும்ப பெற வேண்டும்: விரைந்து பட்டா வழங்கும் திட்டங்களில், நில அளவை களப் பணியாளர்கள், காலம் நேரம் பாராமல் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், தாசில்தார்களின் ஒருதலைபட்சமான உத்தரவுகள், களப்பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தாசில்தார்களின் உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications