ஓ..இதுதான் அந்த ரகசியமா? கார், பைக்கில் போகும் போது எல்லாம் சரியாக இருந்தும் போலீஸ் பிடிப்பது ஏன்?
சென்னை: கார், பைக்கில் போகும் போது எல்லா டாக்குமெண்டும் சரியாக இருந்தும் போலீசார் உங்களை பிடிக்கிறாங்களா? அப்படீன்னா இந்த வீடியோவை நீங்கள் பாருங்கள்.. போலீஸ் உங்களை பிடிக்க என்ன காரணம் என்பதை அறியலாம்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்களில் ஹெல்மெட் போட்டிருந்தாலும், எல்லா ஆவணங்களும் வண்டியில் சரியாக இருந்தாலும் வாகன சோதனையில் இருசக்கர வாகனங்களை போலீசார் பிடிப்பார்கள்.. ஏன் இப்படி பிடிக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் உண்டு. இதேபோல் காரில் சீட் பெல்ட் போட்டு ஒழுங்காகவே சிலர் பயணிப்பார்கள்.

காரில் உள்ள ஆவணங்கள் எல்லாமே சரியாகவே இருக்கும். ஆனால் காரையும் போலீசார் சோதனை என்ற பெயரில் பிடிப்பார்கள். இதேபோல் தான் சரக்கு வாகனங்கள், லாரிகள் என எல்லா வாகனங்களையும் போலீசார் வாகன சோதனையில் பிடிக்கிறார்கள். அப்படி போலீசார் பிடிக்க காரணம் என்ன என்பது குறித்து சென்னை போக்குவரத்து போலீஸ் வீடியோ வெளியிட்டுள்ளது
அந்த வீடியோவில் போலீசார் கூறும் போது, "கார், பைக்கில் போகும் போது எல்லா டாக்குமெண்டும் சரியாக இருந்தும் போலீசார் உங்களை ஏன் பிடிக்கிறாங்க.. அப்ப நீங்க இதை பண்ணாம விட்டிருப்பீங்க.. என்னென்று யோசிக்கிறீங்களா.. அதுதான்ங்க உங்கள் நம்பர் பிளேட்.. அரசின் ரூல்ஸ்படி உங்கள் வாகனத்தின் நம்பர் பிளேட் வளையாமலும், துருப்பிடிக்காமலும் இருக்க வேண்டும். உங்கள் நம்பர் பிளேட்டில் உள்ள எழுத்துக்கள் எல்லாமே ஒரே அளவோடு சீராக இருக்க வேண்டும்..
உங்கள் வாகனத்தில் நம்பர் பிளேட் உடைந்தோ, அல்லது நம்பர் பிளேட் இல்லாமலோ இருக்கக்கூடாது... இந்த விதிமுறைகளை பின்பற்றினால் உங்கள் பயணம் இனிதே அமையும் " என்று கூறியுள்ளனர்.
Attention motorists...
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) June 19, 2024
வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு...#Trafficawareness #RoadSafety #Chennai #ChennaiTraffic @SandeepRRathore @R_Sudhakar_Ips @chennaipolice_ @roadraja pic.twitter.com/Tjr91vuQBJ
அதேநேரம் முக்கியமான இன்னொரு விஷயம்.. இது சென்னைக்கு மட்டும் கண்டிப்பாக பொருந்தும்.. சென்னையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்தே செல்ல வேண்டும். உங்கள் பின்னால் உட்கார்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியவில்லை என்றால், நீங்கள் 500 அபராதம் செலுத்த வேண்டியது வரும். அதேபோல் சென்னையில் உள்ள மால்களுக்கு போகிறீர்கள் என்றால், வெளியில் எங்கும் மறந்தும் வாகனத்தை நிறுத்தாதீர்கள்..
அப்படி நிறுத்தி சென்றால், திரும்ப வரும் போது அந்த வாகனம் காவல் நிலையத்தில் தான் இருக்கும். டோவ் போட்டு உங்கள் வண்டியை தூக்கி சென்றுவிடுவார்கள். மற்ற நாட்களைவிட ஞாயிறுகளில் கண்டிப்பாக எந்த மால்கள் முன்பும் வாகனத்தை நிறுத்தாதீர்கள். பார்க்கிங் பகுதியில் மட்டும் நிறுத்துங்கள். நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தினால் திரும்ப வரும் போது, 750 ரூபாய் கப்பம் கட்ட வேண்டியது வரும். ஒருவேளை இன்சூரன்ஸ் இல்லை என்றால் அதற்கு ஒரு அபராதமும், கட்ட வேண்டியது வரும். எனவே வாகன ஓட்டிகளே சென்னையில் உஷாராக இருங்கள்.
-
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல்












Click it and Unblock the Notifications