இன்று முதல் வருமான வரி ITR ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யலாம்.. இந்த 10 விஷயங்களை மறக்கவே மறக்காதீங்க
சென்னை: இன்று முதல் வருமான வரி ரிட்டர்ன் ITR தாக்கல் செய்வதற்கான அவகாசம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பின் வரும் 10 விஷயங்களை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் வருமான வரியை சிக்கல் இன்றி தாக்கல் செய்ய முடியும்.
1. இனிமேல் வருமான வரி விலக்கு தொடர்பான ITR ஃபைல் செய்யும் போது முறையான rent விவரங்களை அளிக்க வேண்டும். பொய்யாக கணக்கு காட்டினால் அதை தீவிரமாக பரிசீலனை செய்ய நிதித்துறை முடிவு செய்துள்ளது. கூடுதல் கணக்கு காட்டும் பட்சத்தில் உங்களின் வீட்டு ஓனரின் பான் கார்டை சோதனை செய்ய நிதித்துறை முடிவு செய்துள்ளது. வீட்டு ஓனரின் பான் கார்டு பொய்யாக தரப்பட்டு இருந்தால் அதற்கும் ஆக்சன் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க பல சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த முறை பொய்யான வீட்டு வாடகை பில்களை கொடுத்தவர்களை சோதனை செய்ய தொடங்கி உள்ளது. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பலரும் பொய்யாக வீட்டு வாடகை பில் கொடுக்கின்றனர். இதை சோதனை செய்கின்றனர்.

2. அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் 80ஜிசிசி பிரிவில் கீழ் விலக்கு பெற்றவர்கள் அதற்கான சான்றை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அரசியல்கட்சிகளுக்கு நிதி அளிக்கும் 80ஜிசிசி பிரிவின் கீழ் விலக்கு பெற்றவர்கள் அதற்கான சான்றை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பலர் இதை பயன்படுத்தி விலக்குகளை பெற்ற நிலையில் அரசு இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.
3. புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது
நாளை முதல்.. வருமான வரி ரிட்டர்ன்ஸ்.. இதை மட்டும் சரியா பண்ணலைன்னா.. 1 ரூபாய் கூட கைக்கு வராது!
4.புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது
உங்களின் சம்பளத்தின் முதல்
0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 இலட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 இலட்சம் ரூபா 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 இலட்சம் ரூபா 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்
5. நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும்.
6. இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு வாடகைக்கான மூலத்தில் பெறப்படும் வரிகான (டிடிஎஸ்) வருடாந்திர வரம்பை தற்போதைய ₹2.4 லட்சத்தில் இருந்து ₹6 லட்சமாக உயர்த்துவதாக உத்தரவிட்டுள்ளார்.
7. பட்ஜெட் ஆவணத்தின்படி, ஒருவர் வாங்கும் வாடகை மாதத்திற்கு ₹50,000க்கு மேல் இருந்தால் மட்டுமே இனி அதற்கு டிடிஎஸ் செலுத்த வேண்டும். அதாவது வருடத்திற்கு 6 லட்சம் வரை வாடகை வருமானம் இருந்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டியது இல்லை. பழைய வருமான வரி முறையை பின்பற்ற போகிறீர்கள்.. அதை அடிப்படையாக வைத்து ஏப்ரல் 1க்கு பின் ITR தாக்கல் செய்ய போகிறீர்கள் என்றால்.. உங்களுக்காக பல சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன - ELSS பரஸ்பர நிதிகள், PPF, EPF, NSC, வரி-சேமிப்பு FDகள் மற்றும் பல திட்டங்கள் உள்ளன. அவை பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு பலன்களை உங்களுக்கு வழங்கும். இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பலன்களைப் பெறலாம். இதை கணக்கு காட்டி ITRல் பல விலக்குகளை பெற முடியும்.
8. ஒருவேளை நீங்கள் 80C ஐ முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால், மேலும் வருமான வரி விலக்குகளை பெற விரும்பினால் பிரிவு 80CCD(1B) இன் கீழ் ரூ. 50,000 கூடுதல் விலக்கு விருப்பத்தைப் பெற NPSக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது தேசிய பென்ஷன் சிஸ்டத்தில் முதலீடு செய்வது.
9. ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விடும் வாய்ப்புகள் உள்ளன. ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் பலர் இப்படி செய்யவது இல்லை இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படுவது இல்லை. இதையடுத்து இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். இல்லையென்றால் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக தாக்கல்ஸ் செய்து இ வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ரி பண்ட் சென்றுவிடும்.
10. முதலாவதாக, வருமான வரி ரிட்டன் (ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவலே கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும். வங்கி விவரங்கள், குடியிருப்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரி திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.












Click it and Unblock the Notifications