இதுதான் கடைசி.. உங்க கிட்ட பான் கார்டு இருக்கா? உடனே போய் இதை பண்ணுங்க.. வந்தது அறிவிப்பு
சென்னை: பான் கார்டு வைத்து இருக்கும் நபர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
நாம் வைத்து இருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்றாக பான் கார்டு அட்டையும் மாறிவிட்டது. பான் அட்டை பயன்படுத்துவதன் மூலம்தான் வங்கி தொடர்பான பல சேவைகளை நாம் பெற முடிகிறது.
நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பான் கார்டு என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று அனைத்துடனும் இந்த எண் இணைக்கப்பட்டு இருக்கும்.

பான் அட்டை: லோன் எடுக்க, வருமான வரி தாக்கல் செய்வது, வங்கியில் அதிக அளவு பண பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்களுக்கு பான்கார்டு அவசியம். நம் வரவு செலவு அனைத்தும் இதன் மூலமே கண்காணிக்கப்படுகிறது.
இதற்காக கால அவகாசம் ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டுவிட்டது. பல முறை இந்த அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மார்ச் 31ம் தேதி வரை இதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும்.
அதாவது அந்த எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும். அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் பணம் அனுப்புவது தொடங்கி லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது வரை எல்லாம் சிக்கலாகும். சிக்கலாகும் என்பதை விட மொத்தமாக இந்த பணிகளை செய்வது இயலாத காரியம்.
தற்போது இதற்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பலரும் பான் கார்டை இணைக்காமல் இருந்த நிலையில் ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் கட்டணம் இன்றி பான் அட்டையை இணைக்க ஜூன் 30ம் தேதியுடன் நேரம் முடிந்துவிட்டது.
அதன்பின் வரும் ஜூன் 31ம் தேதி வரை கட்டணத்துடன் 1000 ரூபாய் செலுத்தி பான் அட்டையை இணைக்க முடியும். அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும்.
இந்த நிலையில் மத்திய அரசு வட்டார தகவல்களின்படி இனிமேல் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது. எனவே அபராதத்தை தவிர்க்க உடனே நீங்கள் ஆதார் - பான் கார்டை இணைக்க வேண்டும்.
ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. அதே சமயம் இந்த கட்டாய விதியில் இருந்து சிலருக்கு விலக்கும் அளிக்கப்பட்டு உள்ளது. பின்வரும் நபர்களுக்கு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது.
1. அஸ்ஸாம், மேகாலயா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் வசிப்பவர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது.
2. வருமான வரிச் சட்டம், 1961 இன் படி குடியுரிமை பெறாதவர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது.

3. முந்தைய ஆண்டில் எண்பது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது. அதாவது கடந்த வருடம் உங்களுக்கு 80 வயது ஆகி இருந்தால் இதை இணைப்பது கட்டாயம் கிடையாது.
4. இந்திய குடிமகன் அல்லாதவர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது. வெளிநாட்டில் இருந்து வந்து இங்கே இருக்கும் பட்சத்தில் உங்களிடம் பான் அட்டை இருந்தாலும் அதை இணைக்க வேண்டியது இல்லை. ஏனென்றால் உங்களிடம் ஆதார் இருக்காது.
5. ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட நபர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் கிடையாது என்றாலும் இவர்கள் விருப்பம் இருந்தால் இணைக்கலாம்.
பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யாத பயனர்கள் இருவரும் தங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில், முன் உள்நுழைவு மற்றும் பின் உள்நுழைவு முறையில் இணைக்கலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications