Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தபால் நிலையங்களில் ஆர்டி கணக்கு... சின்ன தவறு.. உங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தபால் நிலையங்களில் ஆர்டி கணக்கு ஆரம்பிப்பவர்கள் சரியான முறையில் மாதம் மாதம் பணம் கட்ட வேண்டும். மாதம் மாதம் பணம் கட்டாமல் விட்டால், அபராதம் செலுத்த வேண்டியது வரும். அது ஒருபுறம் எனில், கடைசி நேரத்தில் கட்டாமல் போனால் உங்களுக்கு பெரிய இழப்பும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் நீங்கள் எந்த ஊரில் உள்ளீர்களோ, அங்கு ஆர்டி கணக்கு இருப்பதே நல்லது. இதுபற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

தபால் நிலையத்தில் பலரும் ஆர்டி கணக்கு ஆரம்பிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆயிரம் ரூபாய் தொடங்கி எத்தனை ஆயிரங்கள் வேண்டுமானாலும் மாதம் மாதம் கட்டலாம். முதல் மாதம் கட்டிய தொகையை ஒவ்வொரு மாதம் கட்ட வேண்டும். நீங்கள் மாதம் ஆயிரம் ரூபாய் கட்டுகிறீர்கள் என்றால், அதே தொகையை ஐந்து ஆண்டுகள் வரை கட்ட வேண்டும்.

Do you close your RT account at post offices Last minute mistakes to avoid when withdrawing money

ஒருவேளை மாதம் மாதம் கட்ட முடியாமல் போனால், அடுத்த மாதம் 1000 ரூபாய் என்றால் 10 ரூபாய் அபராதத்துடன் அடுத்த மாதம் கட்ட வேண்டும். மாதம் ஆயிரம் அல்ல, லட்சம் ரூபாய் கூட மாதம் மாதம் கட்டலாம். உதாரணத்திற்கு நீங்கள் மாதம் 10 ஆயிரம் கட்டி வந்தால் 60 மாதத்தில், அதாவது ஐந்து வருடத்தில் 6 லட்சம் கட்டியிருப்பீர்கள். அதற்கு வட்டி எல்லாம் சேர்த்து 7.2லட்சம் உங்களுக்கு கிடைக்கும்.

நீங்கள் பணத்தை சரியாக கட்டிவிட்டால். உங்கள் RD (Recurring Deposit) கணக்கை எளிதாக மூடலாம். நீங்கள் உங்கள் குழந்தையின் பெயரில் ஆர்டி கணக்கு போடுறீங்க அப்படீன்னா.. நீங்கள் கணக்கு திறந்த தபால் நிலையம் வந்து கணக்கை முடிப்பதற்கு ஒரு விண்ணப்பம் உள்ளது. அதனை தர வேண்டும். அவர்கள் உங்கள் குழந்தையின் பெயரில் உள்ள பணத்தை உங்களது தபால் நிலைய சேமிப்பு கணக்கில் மாற்றித் தருவார்கள்.

ஒருவேளை உங்களுக்கு தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு இல்லை என்றால், உடனே ஓபன் செய்ய வேண்டும். அடுத்த நாள், உங்கள் மகனின் அல்லது மகளின் ஆர்டி கணக்கை முடிக்கும் விண்ணப்பித்தினை நிரப்பி கையெழுத்திட்டால், உங்கள் கணக்கிற்கு பணம் தந்துவிடுவார்கள். இண்டெர்நெட் பேங்கிங் மூலமாக எளிதாக கணக்கில் உள்ள பணத்தை உங்களது வங்கி கணக்கு மாற்றிக்கொள்ளலாம். இல்லை என்றால், ஏடிஎம் பெற்று, பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அதேபோல் ஆர்டி கணக்கை பொறுத்தவரை எந்த ஊரில் உள்ளீர்களோ, அங்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல், கடைசி சில மாதங்கள் கட்ட மறந்தால், உங்களுக்கு முழு பலனும் கிடைக்காமல் போகலாம். அதாவது முழு வட்டி தொகை கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே கடைசி இரண்டு மூன்று மாதங்கள் பணம் கட்டாமல் விட்டுவிட வேண்டாம். வட்டி குறைந்து போய்விடும். சரியான தொகை கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.

அதேநேரம் உங்கள் கணக்கு 3 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலேயே கணக்கை மூடுவதற்கான படிவத்தை (Premature closure form) நிரப்பி, உங்கள் RD பாஸ்புக்கோடு அதை சமர்ப்பித்து பணத்தை பெற முடியும். ஆனால் சேமிப்பு கணக்கிற்கானவட்டி விகிதமான 4 சதவீதம் வட்டியில் தான் பணம் திரும்ப கிடைக்கும். ஒருவேளை
RD கணக்கின் நகல் பாஸ்புக் தொலைந்து போயிருந்தால், அதற்கான கட்டணத்தைச் செலுத்தி நகலைப் பெற முடியும். அதன்பிறகு பணத்தை பெற முடியும். முழு விவரங்களுக்கு கணக்கு தொடங்கிய தபால் அலுவலகத்தினை நாடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+