அண்ணே நான்தான் அடுத்த முதல்வர்.. ஆதரியுங்கள்! மாஜியிடம் சொன்ன அதிமுக புள்ளி.. கண்டுபிடித்த எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருக்கும் டாப் லீடர் ஒருவர் தன்னை ஆதரிக்கும்படி கட்சியில் இருக்கும் வேறு ஒரு மூத்த தலைவரிடம் கோரிக்கை வைத்து இருக்கிறாராம், அவரின் இந்த கோரிக்கை எடப்பாடி பழனிசாமி காதுக்கும் சென்றுள்ளதாம்.

அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி மோதல் தற்போது உட்கட்சி மோதலாக உருவெடுத்து உள்ளது. ஆம் கட்சியில் இந்த கூட்டணி மோதலை வைத்து கதகளி ஆட ஒரு தலைவர் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி கடந்த வாரம் முறிந்தது. அண்ணாமலையின் தொடர் பேச்சு அதிமுகவை சீண்டவே இவர்கள் கூட்டணி முறிந்ததாக கூறப்பட்டது.

உண்மையான காரணம்: ஆனால் அதிமுக பாஜக கூட்டணி முறிய அது காரணம் இல்லை. உண்மையான காரணம் வேறு என்கிறார்கள் பாஜக - அதிமுக வட்டாரத்தினர்.

Do you Edappadi Palanisamy is angry with a senior close leader for trying to break AIADMK party?

முதல் விஷயம் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும். அவர் தலைவர் பதவியில் நீடிப்பது பாஜகவிற்கு சிக்கலாக இருக்கும். அதிமுக கூட்டணிக்கும் சிக்கலாக இருக்கும். அவரால் பாஜக அதிமுக கூட்டணிக்கு நல்லதா என்று நீங்களே பாருங்கள். அவரால் அதிமுகவை விடுங்கள் பாஜகவிற்கு நல்லதா என்பதை முதலில் பாருங்கள். பாஜகவிற்கு அவர் என்ன செய்கிறார் என்பதை உளவுத்துறை மூலம் நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று எடப்பாடி டெல்லியிடம் கூறியுள்ளார்.

டெல்லி எடப்பாடியிடம் லோக்சபா தேர்தலில் 20 இடங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். 20 இடங்கள் கொடுத்தால்தான் கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளனர். இதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

( துண்டு துண்டாகும் அதிமுக? தனிக்கட்சி தொடங்கட்டுமா? மிரட்டல் )

அடுத்த கட்டமாக 20 இடங்களில் நாங்கள் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கும், டிடிவி தினகரன் தரப்பிற்கும் இடம் கொடுப்போம். அதேபோல் சசிகலாவிற்கும் இடம் கொடுப்போம். அதை பற்றி நீங்கள் வருத்தப்பட கூடாது என்றும் கூறியுள்ளனர். ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவும் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணம் ஆகிவிட்டது என்கிறார்கள்.

மோதல்: இப்படி கூட்டணி முறிவால் அதிமுக - பாஜக விழி பிதுங்க அதிமுக உள்ளேயே உட்கட்சி மோதல் ஏற்பட்டு உள்ளதாம். அதன்படி பாஜக கூட்டணி வேண்டும் என்று ஒரு தரப்பினர் நினைக்கிறார்களாம். பாஜக இருந்தால்தான் நம்முடைய வழக்குகள் பாதிக்காது. நமக்கு எதிராக ரெய்டு வர மாட்டார்கள். நம் பிஸ்னஸ் சரியாக நடக்கும் என்று பாஜக கூட்டணிக்கு ஆதரவாக முக்கிய அதிமுக புள்ளி ஒருவர் காய் நகர்த்தி வருகிறாராம்.

இப்படிப்பட்ட அந்த நபர்.. ஒருவேளை பாஜக உத்தரவிட்டால் அதிமுகவை உடைத்து அதிமுகவில் தனி அணி ஒன்றை உருவாக்கி பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் ரெடியாக இருக்கிறாராம். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த அதிமுக புள்ளி, சக மாஜி மூத்த தலைவர் ஒருவரிடம் சென்று.. பாஜக கூட்டணி உடைந்தால் பெரிய சிக்கல் ஆகும்.

( அவசரம்.. கிளம்பி வாங்க! டெல்லிக்கு பறக்கும் அண்ணாமலை.. அதிமுக முடிவால்.. அரண்டு போன பாஜக? )

பாஜக ஆதரவுடன் நாம் கூட்டணி அமைக்க வேண்டும். அதோடு நான்தான் அடுத்த முதல்வர். எனக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும். கட்சியில் பிரச்சனை வந்தால் என்னை ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம். ஆனால் அந்த மாஜி இதை கேட்டுவிட்டு நேரடியாக சென்று அதை எடப்பாடி காதிலும் போட்டுவிட்டாராம்.

இந்த விஷயம் தெரிந்தே கட்சியில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் என்று எடப்பாடி அதிரடி காட்டி வருகிறாராம். விரைவில் கட்சி தன்னை விட்டு போகாத அளவிற்கு சில ஏற்பாடுகளை செய்வார் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+