Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல் முறையாக தமிழகத்தில் மாஸ்.. வீடு கட்ட ஆன்லைனில் அனுமதி.. யாருக்கெல்லாம் இந்த திட்டம் பொருந்தும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்றை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டிருக்கிறார்.

கட்டிடங்கள், மனைப்பிரிவுகளுக்கான அனுமதியை உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்ககம் , சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கி வருகின்றன..

building permit Tamil Nadu Government stalin

ஆன்லைன் வசதி: இதில், ஏற்கெனவே, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கட்டிட அனுமதிக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அதுபோலவே, உள்ளாட்சி அமைப்புகளிலும் ஆன்லைனில் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நடைமுறை இன்றைய தினம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்தவகையில், தமிழகத்தில் முதல்முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

"www.onlineppa.tn.gov.in" என்ற இணையதளத்தில் ஆன்லைனில் இதற்காக விண்ணப்பித்தால், இந்த விவரத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். இனிமேல், சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் விண்ணப்பதாரர்கள் செல்ல வேண்டியது இல்லை.

வசதிகள்:
இதன்மூலம், கட்டிட பணிகள் முடிந்ததும், முடிவு சான்றிதழ் பெறுவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது... அதேபோல, பரிசீலனை கட்டணம், கட்டமைப்பு, வசதிக்கட்டணங்களில் இருந்தும் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. 2,500 சதுரஅடி வரையிலான மனையில், 3,500 சதுரஅடியில் கட்டப்படும் வீடுகளுக்கு இந்த திட்டம் பொருந்தும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

பொதுவாக, தமிழக அரசின் ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின் அடிப்படையில் தற்போது கட்டிட அனுமதி வழங்கப்படுகின்றன. மேலும், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்துக்கு பணி முடிப்பு சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புபெற முடியும். இந்த விதிகளை திருத்த வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தபடியே வந்தன.

கட்டிட முடிவு சான்றிதழ்: எனவேதான், 300 சதுர மீட்டருக்குள் கட்டிட பரப்பளவு கொண்ட 14 மீட்டர் உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டிடங்களுக்கும் கட்டிட முடிவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்ததுடன், அதற்கான அரசாணையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

அதேபோல தமிழகத்தில், எட்டு வீடுகள் வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டிருக்கிறது.. அதுமட்டுமல்ல, அதிக உயரமில்லாத கட்டடங்களின் குறைந்தபட்ச உயர வரம்பு, 39 அடிக்கு பதிலாக, 46 அடியாக கணக்கிடப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது.. இப்போது, ஆன்லைன் மூலம் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்திருக்கிறார்..

அமைச்சர் தகவல்: இது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, யார் யாருக்கெல்லாம் இந்த திட்டம் பொருந்தும் என்பது குறித்தும் அமைச்சர் விளக்கம் தந்தார்.

அமைச்சர் சொல்லும்போது, " வீடுகள் கட்டும் மக்களின் கனவை எளிதாக்கவே ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விபரங்கள் அடிப்படையில் இந்த உடனடி அனுமதி அளிக்கப்படும்... 2,500 சதுர அடி நிலம் வைத்திருக்கும் ஒருவர், 3500 சதுர அடி அல்லது 3500 சதுர அடிக்கு கீழே கட்டுகிறபோது அவர்கள் சுயசான்றிதழ் தந்து, இதற்கான அனுமதியை ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். இதற்கான அலைச்சல் குறையும்..

வேண்டுகோள்: ஆனால், ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால், விதிமுறைகளுக்கு உட்பட்டு சட்டத்துக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.. இதன்மூலம் பலகோடி மக்கள் பெரிய அளவில் பயன்பெறவாய்ப்புள்ளது.. எனவே, 2500 சதுர அடியில், 3500 அடிக்கு கீழே கட்டிடம் கட்டுகிற அத்தனை பேருக்குமே இந்த திட்டம் பொருந்தும்..

அனுமதி பெறுவதில் உடனடியாக கால தாமதக்கூடாது என்பதற்காகத்தான், இந்த ஆன்லைன் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.. எனவே, மாநகராட்சி, நகராட்சி என வேறுபாடு இல்லாமல், வசதி படைத்தவர், வசதியில்லாதவர் என வித்தியாசம் இல்லாமல், எல்லாருக்கும், எல்லா இடத்திலும் இந்த திட்டம் பொருந்தும். ஆய்வின்போது விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+