வங்கி கணக்கு இருக்குல்ல? வருமான வரியை கட்டறீங்களா? இப்படியெல்லாம் "இமெயில்" வருதா? அப்ப கவனமா இருங்க
சென்னை: வருமான வரியை கட்டுபவரா நீங்கள்? உங்களுக்கு வருமான வரித்துறை பெயரில் மெயில்கள் வருகின்றனவா? அப்ப இந்த விஷயத்தில் கவனமா இருங்க.
வருமான வரித்துறை பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி போலி மின்னஞ்சல்கள் மூலம் பொது மக்களை ஏமாற்றி வருவது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது.. இதுகுறித்த புகார்களும் அடிக்கடி வருமான வரித்துறையினருக்கு சென்றவண்ணம் உள்ளன. அதனால்தான், இதுபோன்ற மோசடிக்காரர்கள் மீது வருமான வரித்தறையும் கடும் நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகிறது.

அதுமட்டுமல்ல, நாட்டில் வரி செலுத்துவோரின் வங்கி கணக்கு, கடன் அட்டை, குறித்தெல்லாம் ரகசிய எண்களையோ அல்லது பாஸ்வேர்ட்களையோ வருமான வரித்துறை எப்போதுமே மெயிலில் கேட்பதில்லை என்பதால், இதுபோன்ற ரகசிய விவரங்களை கேட்டு வரும் போலி மின்னஞ்சல்களை யாரும் பதிலளிக்க தேவையில்லை என்று வருமான வரித்துறை பலமுறை பொதுமக்களை எச்சரித்திருக்கிறது.
இ மெயில்கள்: அதுமட்டுமல்ல, இதுபோன்று அனுப்பப்படும் போலி இ மெயில்களை பொதுமக்கள் நம்பவோ, அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை தரவோ வேண்டாம் என்றும், வருமான வரியை திரும்ப பெறுவது குறித்த சந்தேகங்கள், தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளை அணுகலாம் என்றும் அறிவுறுத்தியவண்ணம் உள்ளது.
ஆனாலும், வருமான வரித்துறையிடம் இருந்து வருவது போன்ற தோற்றத்தை அளித்து, ஏமாற்ற முயற்சிக்கும் மோசடிகள் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகியிருக்கிறது. வருமான வரித்துறை பெயரிட்டு இ-மெயில்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
எச்சரிக்கை: எப்போதுமே, வருமான வரி தொடர்பான நோட்டீஸ் அல்லது வேறு எச்சரிக்கை கொண்ட எந்த மெயிலாக தோன்றினாலும், முதலில் அதன் உள்ளடக்கத்தை பொறுமையாக படித்து பார்க்க வேண்டும்... காரணம், பயனாளிகளிடம் காணப்படும் பதற்றம்தான், மோசடியாளர்களுக்கு பெரும் சாதகமாக போய்விடுகிறது.
அடுத்ததாக, மெயிலின் விபரங்களை நன்றாக படிக்கும்போதே, அது உண்மையானதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.. பிறகு, வருமான வரித்துறை அனுப்பும் மெயில்களுக்கென நெறிமுறைகள் இருக்கின்றனவா? அனைத்து விதமான நோட்டீஸ்களும் ஆவண அடையாள எண்களுடன் உள்ளனவா? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
வெப்சைட்கள்: எந்த மாதிரியான மெயில்கள் வந்தாலும், அந்த விவரங்கள் அத்தனையும், வரித்துறை இணையதளத்திலும் இருக்கின்றனவா? என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.. இணையதளத்திலும் அந்த மெயில்கள் பதிவேற்றப்பட்டிருக்க வேண்டும்... இணையதள உறுப்பினர் பக்கத்திலும் இதனை சரி பார்க்கலாம்.
அதுமட்டுமல்ல, இப்படி அனுப்பப்படும் மெயில்கள் அனைத்தும், குறிப்பிட்ட பிராந்தியம் சார்ந்த அதிகாரப்பூர்வ முகவரியில் இருந்தே அனுப்பி வைக்கப்படும்... பொதுவாக தோன்றும் மெயில் முகவரிகளில் இருந்து எந்தவிதமான மெயிலும் வராது என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications