வங்கிக்கணக்கு இன்றே முடியுது, பேங்க் அக்கவுண்ட் நம்பர் என்ன? OTP வந்திருக்கா? சென்னை போலீஸ் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் உள்ளதா? காவல்துறை முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிவுறுத்தலையும் வழங்கியிருக்கிறது.

சமீபகாலமாகவே, வங்கிகளின் பெயர்களை சொல்லி மோசடி வேலைகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.. அதனால்தான், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைக்க வேண்டும், யாரிடமும் பகிர வேண்டாம்.

Do you have Bank Account and What is the Important Advice from the Cyber crime Police

மோசடிபேர்வழி: மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என்று வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன. வங்கியிலிருந்து பேசுகிறோம், மாதத்தவணையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக விவரங்களை சொல்லுங்கள், வங்கிக்கணக்கு ஓடிபி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டின் சிவிவி எண், பாஸ்வேர்டு, அக்கவுண்ட் நம்பர் என்ன? என்றெல்லாம் கேட்டு மோசடியில் ஈடுபடலாம்..

அதனால், வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருந்து எந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று எத்தனையோ முறை போலீசார் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர். இருந்தபோதிலும் மோசடிப்பேர்களின் பிடியில் சில அப்பாவிகள் சிக்கிவிடுகிறார்கள்..

தொடர் மோசடி: புதுச்சேரியில் கடந்த சில நாட்களில் மட்டும், 4 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேரிடம் நூதனமான திருட்டுகள் நடந்துள்ளன.. கிட்டத்தட்ட 5.06 லட்சம் ரூபாய்க்கு மோசடிகள் நடந்துள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசார் சொல்கிறார்கள்.

இதோ நம்முடைய சென்னையிலும் புதுமோசடி நடந்துள்ளது. புழல் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லத்தீப். இவரது செல்போனுக்கு மெசேஜ் லிங்க் வந்துள்ளது.. அதில், உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. உடனடியாக லிங்கில் வங்கி கணக்கின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி: இதனை உண்மை என்று நம்பிய அப்துல்லத்தீப், தன்னுடைய வங்கி கணக்கின் விபரங்கள் அனைத்தையும், அந்த குறிப்பிட்ட லிங்கில் பதிவு செய்தார்.. அடுத்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவரது வங்கி வணக்கில் இருந்த ரூ.44 ஆயிரம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்திருக்கிறது. இதைப்பார்த்து அதிர்ந்து போன அப்துல் லத்தீப், அப்போதுதான், நூதன முறையில் மோசடி நடந்திருப்பதை அறிந்தார்.

இதுபோல் புழலை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும், மர்ம கும்பல் வங்கி கணக்கு விபரம், பான் எண் விபரங்களை பதிவு செய்யக்கூறி மெசேஜ் மற்றும் லிங்க் அனுப்பி ரூ.10 ஆயிரத்தை சுருட்டியிருக்கிறார்கள்.

புழல் போலீஸ்: இந்த மோசடி சம்பவங்கள் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறார்கள். போலீசார் இதைப்பற்றி சொல்லும்போது, செல்போனுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல், லிங்கை கிளிக் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இணையதள முகவரி சரியாக இருந்தால் மட்டுமே பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் வங்கிக்கு நேரில் சென்று தங்களது சந்தேகங்கள் குறித்து கேட்டால் பணம் இழப்பை தவிர்க்கலாம்.

ஓடிபி: பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை யாருக்குமே தெரிவிக்க வேண்டாம். அதேபோல, வங்கி மேலாளர்கள் யாருமே, ஒருபோதும் ஓடிபி கேட்க மாட்டார்கள். அதனால், யாரேனும் உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால், தெரிவிக்க வேண்டாம்.. இணைப்பையும் துண்டித்துவிடுங்கள்" என்று காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+