தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் எங்கு நிற்கும்? கட்டணம் எவ்வளவு?
சென்னை: தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் அந்தியோதயா விரைவு ரயிலின் கட்டணம் என்ன, எங்கெல்லாம் நிற்கும் என்பது குறித்து பார்ப்போம்.
தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ரயில் பயணம்தான் எளிதானது. அலுப்பு தெரியாமல் ஏறினதும் தெரியாமல் இறங்கியதும் தெரியாமல் அலேக்காக வீடு போய் சேரலாம். ஆனால் இதில் முன்பதிவு செய்ய வேண்டியது உள்ளது. முன் கூட்டியே திட்டமிடப்பட்ட பயணங்களுக்கு முன்பதிவு செய்யலாம்.

ஆனால் நாம் எதிர்பார்க்காத திடீர் பயணங்களுக்கு என்ன செய்வது? முன்பதிவு செய்யப்படாத ரயில்களையும் பெட்டிகளையும்தான் அணுக வேண்டியுள்ளது.
இதுகுறித்து Film Food Fun & Fact எனும் வலைதளபக்கத்தில் கூறியிருப்பதாவது: தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா விரைவு வண்டி குறித்து பார்ப்போம். முன்கூட்டியே பிளான் செய்யாமல் அவசரமாக சென்னையில் இருந்து தென் தமிழக நகரங்களுக்கு செல்லும் போது இரயில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும்.

அதற்கு ஒரு சிறிய தீர்வு தான் இந்த அந்தியோதயா ரயில். இந்தியாவில் பல அந்தியோதயா ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் ஸ்பெஷல் என்னவென்றால் இது முன் பதிவு செய்ய முடியாது. 15 லிருந்து 20 பெட்டி எல்லாமே அன் ரிசர்வ் (UR) தான். மற்றவை எல்லாம் வாராந்திர ரயில்கள் மட்டுமே.
ஆனால் இந்தியாவிலேயே தினசரி இயக்கப்படும் அந்தியோதயா ரயில் இது மட்டுமே. இது தாம்பரத்தில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு அடுத்த நாள் பகல் 12:50 க்கு சேரும். ( தாம்பரம் to நாகர்கோவில் Rs.275). இதில் உள்ள சிரமம் என்னவென்றால் இது 14 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். அதாவது மற்ற ரயில்கள் 10 மணி நேரத்தில் சென்றடையும்.
ஆனால் இந்த ரயில் விழுப்புரம் வரை நேராக சென்று அங்கிருந்து கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்று மீண்டும் நேரான பாதையில் செல்லும். இருந்தாலும் அதிக நெரிசல் இல்லாமல் பயணிக்க ஒரு சிறந்த வண்டி. இது IRCTC ஆப்பில் இருக்காது. இந்த ரயில் எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா.
தாம்பரத்தில் புறப்படும் இது செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில். அது போல் நாகர்கோவிலில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அடுத்த நாள் அதிகாலை 5.50 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.












Click it and Unblock the Notifications