தான பத்திரம்.. சொத்தை தானமாக தரும்போது இது முக்கியம்.. தான செட்டில்மென்ட் யாருக்கு செல்லுபடியாகும்?
சென்னை: தானமாக கொடுக்கும் சொத்தை பதிவுசெய்யும்போது முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டுமா? தான செட்டில்மென்ட் பத்திரம் செய்யும் நன்கொடையாளர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன? தான பத்திரம் பதிவதற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா?
ஒருவர் தனது சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தைத் தான் விரும்பும் நபருக்கு எந்த ஒரு பிரதிபலனும் பெற்றுக்கொள்ளாமல் எழுதிக்கொடுக்கும் ஆவணமே தான செட்டில்மென்ட். பிறருக்கு தானமாக அல்லது பரிசாக தரும் சொத்தாகும்.. இதற்காக பணம் அல்லது வேறு பிரதி பலன் போன்ற எந்தவிதமான பயனையும் எதிர்பார்க்காமல் தானமாகவே எழுதி கொடுக்கும் ஆவணம் இதுவாகும்.

இலவசம்: தனக்கு சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ ரத்த சம்பந்தம் இல்லாத வேறு ஒருவருக்கு கிரையம் செய்யாமல், முழுக்க முழுக்க இலவசமாக அளிப்பதை பதிவு செய்வதற்கு பயன்படுவதுதான், இந்த தான பத்திரம். அந்தவகையில், நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்துகொள்ளும்போது இந்த முறையை கையாளலாம்.
தாமாகவே முன்வந்து தரும் சட்டப்பூர்வ ஆவணமாகவே இந்த தான பத்திரம் கருதப்படுகிறது.. அதனால், நீதிமன்ற உத்தரவு எதுவும் இல்லாமலேயே, உடனடியாக இதை செயல்படுத்திவிடலாம்.. இதனால் நேரம் மிச்சமாகிறது.
நன்கொடையாளர்: இப்படி தன்னுடைய சொத்தை இன்னொருவருக்கு பரிசாக வழங்குபவரை "நன்கொடையாளர்" என்பார்கள். இந்த நன்கொடையாளர் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
முதலில் நன்கொடையாளர் ஒரு இந்திய குடிமகனாக தகுதியுடையவராக இருக்க வேண்டும்... நன்கொடை பெறுபவர் மைனராக இருக்கலாமே தவிர, தானமாக தருபவர் மைனராக இருக்கக்கூடாது.. அதைவிட முக்கியமாக, பயனாளி உயிருடன் இருக்க வேண்டும், இல்லையெனில், சொத்து செல்லாமல் போய்விடும்.
பத்திரங்கள்: பத்திரத்தில், தன்னுடைய எந்த சொத்தை தானமாக தரப்போகிறார் என்ற விவரத்தை நன்கொடையாளர் குறிப்பிட வேண்டும்.. அதேபோல, சொத்துக்களை யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், தானமாக தருவதாக பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.. அதுமட்டுமல்ல. சொத்துக்களை தானமாக தருபவரின பெயர், முகவரி என ஒட்டுமொத்த குடும்பத்தினரின் பெயரும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
பத்திரம் ஆவணப்படுத்தப்பட்ட தேதி மற்றும் இடம் குறிப்பிட வேண்டும். தானப்பத்திரம் தருபவருக்கும், பெறுபவருக்கும் என்ன உறவு என்பதையும் எழுத வேண்டும்.. இந்த தான பத்திரத்திற்கு 2 சாட்சி கையெழுத்துக்களும் அவசியமாகும்.
தானப்பத்திரம்: நன்கொடையாளர், தன்னுடைய சொத்துக்களை, வேறொருவருக்கு தானமாக தந்துவிட்டால், மறுபடியும் அதை பெறவும் முடியாது, அந்த சொத்தில் எந்த உரிமையும் கொண்டாடவும் முடியாது..
இப்படி தானமாக கொடுக்கும் சொத்தை பதிவுசெய்யும்போது முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஒருவேளை, அசையா சொத்தை தானமாக வழங்க நேர்ந்தால், சொத்து பரிமாற்றம் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், சொத்தின் மதிப்பு அடிப்படையில் முத்திரை கட்டணம் செலுத்த வேண்டும். அப்போதுதான், தான பத்திரம் சட்டபூர்வமானதாக கருதப்படும்..
அந்தவகையில், தான பத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் 2000 ரூபாய் கட்ட வேண்டும் என்கிறார்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications