வீடு காப்பீடு பற்றி தெரியுமா? வாடகைக்கு குடியிருப்போருக்கு வரப்பிரசாதம்.. இவ்வளவு நன்மைகளா?
சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னையில் சொந்த வீட்டில் குடியிருந்தவர்கள் மட்டுமில்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள், கடை வைத்துள்ளவர்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளனர். வீட்டை இன்சூரன்ஸ் செய்தவர்களுக்கு பெரிய நிவாரண தொகை கிடைக்கிறது. எனவே இன்றைய சூழலில் வீட்டின் உரிமையாளர் மட்டுமல்ல, வாடகைதாரரும் இன்சூரன்ஸ் எடுக்கலாம்.. அது எப்படி என்பதை பார்ப்போம்.
மிக்ஜாம் புயலின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் சென்னையில் ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் வீடுகளை மற்றும் வீட்டில் உள்ள உடமைகளை இழந்துள்ளனர். குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர் வீட்டில் பயன்படுத்தி வந்த டிவி, பிரிட்ஜ், வாசிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், பீரோ, கட்டில், மெத்தை, கார், பைக், துணிகள், சமையல் பொருட்கள் என எல்லாவற்றையும் பறிகொடுத்திருக்கிறார்கள், தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது, சிலரது வீடுகளே இடிந்து விழுந்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு வெரு வெள்ள பாதிப்பு எங்கெல்லாம் இருந்ததோ அந்த பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பாதிப்பு இப்போதும் இருந்துள்ளது. 2015 முதல் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறக்கப்படவில்லை என்றாலும், 36 மணி நேர தொடர்மழையால் சென்னையில் அதிகமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடசென்னை, தென் சென்னை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் வீடு கட்டி உள்ளவர்கள் காப்பீடு எடுத்து வைத்திருப்பார்கள். அவர்களுக்கு வீடு சேதம் ஆனால் நிவாரணம் கிடைக்கும்.
இதேபோல் கடைகள் வைத்திருப்போர் காப்பீடு எடுத்து வைத்திருப்பார்கள். அவர்களுக்கும் உரிய நிவாரணம் கிடைத்துவிடும். எனக்கு தெரிந்து மடிப்பாக்கம் பகுதியில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மொத்த பொருட்களும் தண்ணீர் புகுந்து வீணாய் போய் விட்டது. அவர் காப்பீடு செய்திருந்த காரணத்தால் நிவாரணம் கிடைத்துவிடும். கடைகளில் பெரிய அளவில் பொருட்கள் வைத்துள்ளவர்கள் காப்பீடு செய்வது அவசியம். இதேபோல் வீடு காப்பீடும் அவசியம் ஆகும்.
ஏனெனில் பொதுவாக நம் மக்கள் வாழ்நாள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, வாகன காப்பீடு ஆகியவற்றை எடுக்கிறார்கள். ஆனால், வீடு காப்பீடு , கடை காப்பீடு திட்டம் மேற்கொண்டால் சென்னையில் இனி வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
வீடுகளுக்கான காப்பீடு வழங்கும் திட்டம், பாரத் கிரஹ சுரக்ஷா என்ற திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இந்த திட்டத்தின் படி, வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் காப்பீடு எடுத்து வைத்துக் கொள்ள முடியும். அதேபோல் வாடகைதாரர்களும் வீட்டில் உள்ள பொருட்களுக்கு காப்பீடு எடுத்துக் கொள்ள முடியும். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இந்தியா அசூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி, நேஷ்னல் இன்சூரன்ஸ் ஆகியவை இந்த திட்டங்களை செயல்படுத்துகின்றன.
வீட்டுக்கான காப்பீடு திட்டத்தின் சேர்ந்தால், வீட்டில் உள்ள பார்க்கிங் பகுதி, வராண்டா, வீட்டு உபயோகத்துக்கான அவுட் ஹவுஸ், சுற்றுச்சுவர், சோலார் பேனல், தண்ணீர் தொட்டிகள், சுற்றுச்சுவருக்குள் இருக்கும் சாலைகள் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணம் கிடைக்கும். இதேபோல் வீட்டில் குடியிருந்தவர்கள் வெள்ளம் காரணமாக வெளியேறினால் ஏற்படும் வாடகை இழப்பு, அல்லது இயற்கை பேரிடரால் உங்கள் சொந்த வீடு சேதமடைந்து நீங்கள் வாடகைக்கு வேறு வீட்டுக்கு செல்ல வேண்டியிருந்தால் அதற்கான தொகையும் வீடு காப்பீடு திட்டத்தில் கிடைக்கும். வாடகை வீட்டில் உள்ளவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். ஆண்டுக்கு வெறும் 2000 ரூபாய் கட்டினாலே பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர்.
வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்கள், வீட்டு சாதனப் பொருட்கள் பகுதியாக சேதமடைந்திருந்தால் அதை சீர் செய்வதற்கான செலவுக்கு பணம் கிடைக்கும். வீட்டில் உள்ள பொருட்கள் முழுவதுமாக சேதமடைந்திருந்தால், அதே பொருள் அல்லது அதுபோன்ற வேறு ஒரு பொருள் வாங்குவதற்கான செலவுத் தொகை கிடைக்கும். நகை, விலையுயர்ந்த பொருட்கள் சேதமடைந்திருந்தால், அதை சீர் செய்வதற்கான செலவு தொகையும் வழங்கப்படும். மேலும் வீடு, உடமைகள் பாதிக்கப்பட்டு, யாராவத உயிரிழக்க நேர்ந்தால், ஒருவருக்கு தலா ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்பபடுகிறது. முழு விவரங்களை காப்பீடு நிறுவனங்களில் கேட்டு பெறலாம்.
-
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications