"கோபாலபுரம்" வீட்டை விடுங்க.. அந்த குருவிக்கூட்டுக்குள்ளே, நானும் பத்மாவதியும்.. யாரு கருணாநிதி? வாவ்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இனிய நினைவுகளை, திமுகவினர் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.. அந்தவகையில், முக்கிய நிகழ்வு குறித்தும் சிலாகித்து சொல்கிறார்கள்.
இந்த ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் வருடம் முழுவதுமே நூற்றாண்டு விழாவாக திமுகவினர் கொண்டாட உள்ளனர்.
திராவிட இயக்கத்தின் கொள்கை , கலைஞரின் அளப்பரிய சாதனைகளை மக்கள் நெஞ்சில் பதிவு செய்யும் வகையில் இது அமைந்திடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது

விழாக்கள்: தமிழக அரசு தரப்பிலும், திமுக சார்பிலும் மிக பிரமாண்டமாக விழா கொண்டாடுவதாக அறிவிப்புகள் வெளியாகின.. அதாவது, கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் அவரால் பயனடைந்த மக்களை இணைத்து விழாக்களை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும், இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.. இதையொட்டி பிரம்மாண்டமான பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. .ஆனால், ஒடிசா ரயில் விபத்து காரணமாக, பொதுக்கூட்டம் அன்றைய தினம் ரத்து செய்யப்பட்டு, வேறு ஒரு நாளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, கலைஞர் கருணாநிதியின் இனிய நிகழ்வுகளையும், மறக்க முடியாத தருணங்களையும் திமுகவினர் இணையத்தில் பதிவிட்டு நெகிழ்ந்து வருகிறார்கள்.. அதில் ஒன்றுதான், 10 ரூபாய் வீட்டில் கலைஞர் வாழ்ந்த வாடகை வீடு.. இது கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ளது.
10 ரூபாய் வாடகை: அரவான் கோயிலுக்கு முன்புறம் செல்லும் சிறிய சந்தில் இருக்கிறது இந்த வீடு. கான்ங்கிரீட் காடாக மாறி வரும் கோவையில், இப்போதும் பழைமை மாறாமல் கம்பீரமாக இருக்கிறது அந்த குட்டி ஓட்டு வீடு.. 5 முறை முதல்வர், 13 முறை எம்எல்ஏ எளிதில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தை அடைந்த, கலைஞர் கருணாநிதி ஒரு காலத்தில் இந்த வீட்டில்தான் தங்கியிருந்திருக்கிறார். இந்த வீட்டுக்கு வாடகை ரூ.10
1945 ம் ராஜகுமாரி படத்துக்கு வசனம் எழுதுகிறார் கருணாநிதி.. இந்த படத்தில் எம்ஜிஆர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகிறார்.. அதுவரை எம்ஜிஆர் துணை நடிகராக நடித்து வந்தவர், இந்த படத்தில்தான் ஹீரோவாக அறிமுகமாகிறார்.. இந்த படத்திலிருந்துதான் எம்ஜிஆர் - கருணாநிதி இடையே நட்பு அரும்ப துவங்கி உள்ளது.. சென்ட்ரல் ஸ்டுடியோவில் உருவான இந்த படத்தில், பணியாற்றுவதற்காக கோவை வந்த கருணாநிதி, மனைவி பத்மாவதியுடன் சிங்காநல்லூரில் உள்ள இந்த குட்டி வீட்டில்தான் குடியேறியிருக்கிறார்.
பத்மாவதி: நெஞ்சுக்கு நீதி - முதல் பாகத்திலேயே இந்த வீட்டை பற்றி கருணாநிதி அழகாக பதிவு செய்திருக்கிறார். "கோவை சிங்காநல்லூரில், 10 ரூபாய் வாடகைக்கு வீடு பிடித்து, நானும் என் மனைவி பத்மாவதியும் தங்கியிருந்தோம். பத்துக்குப் பத்து அளவுகொண்ட அந்தக் குருவிக் கூட்டுக்குள் உட்கார்ந்துகொண்டு, நான் எழுதிக் குவித்தவை ஏராளம். அந்த வாழ்க்கை அவ்வளவு இன்பமாக இருந்தது" என்று நினைவு கூர்ந்துள்ளார் கருணாநிதி.
நெருக்கம்: அண்ணாசாமி என்பவர்தான் அந்த வீட்டின் ஓனர்.. ஒருமுறை, சேலம் ரயிலில் குடியரசு நாளிதழைப் படித்தபடி பயணித்துக் கொண்டிருந்த அண்ணாசாமியை, சாமியார் ஒருவர் சீண்டியிருக்கிறார். அப்போது, அந்த ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த கருணாநிதி, அந்த சாமியாரை விரட்டியுள்ளார். அங்குதான், அண்ணாசாமிக்கும், கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

அந்த நட்பின் தொடர்ச்சியாகத்தான், கருணாநிதியை தன்னுடைய வீட்டில் தங்க வைத்துள்ளார் அண்ணாசாமி.. கிட்டத்தட்ட 4 வருடங்கள் கருணாநிதி இங்கு குடியிருந்திருக்கிறார்.. இங்கிருந்து, எல்லா இடத்துக்கும் கருணாநிதி நடந்தே போவாராம்..
டேபிள் - சேர்: 1993ம் ஆண்டு, அந்த வீட்டு ஓனர் அண்ணாசாமி இறந்துவிட்டாராம்.. எனவே, துக்கம் விசாரிப்பதற்காக அந்த வீட்டுக்கு கருணாநிதி வந்து சென்றுள்ளார்.. அதற்கு பிறகு, தன் அப்பா வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, இன்றைய முதல்வர் ஸ்டாலினும் ஒருமுறை இந்த வீட்டுக்கு வந்து சென்றாராம்.. இந்த வீட்டில் கருணாநிதி வாழ்ந்தபோது, பயன்படுத்தி வந்த அதே டேபிள், சேர் உட்பட எல்லா பொருள்களும் இப்பவும் அதே இடத்தில்தான் இருக்கின்றவாம்..
இந்த வீட்டில் குடியிருந்தவாறே கல்லறை தோழன் விதவை கண்ணீர் போன்ற நாடகங்களுக்கும் ராஜகுமாரி திரைப்படத்துக்கும் வசனம் எழுதினார். அரவான் மேடையில் உட்கார்ந்து எழுதுவதும் சிங்காநல்லுார் குளக்கரை வரை நடந்து சென்று, அங்குள்ள மரத்தடியில் உட்கார்ந்து வசனம் எழுதுவாராம் கலைஞர்.. இந்த நினைவுகளை எல்லாம் உடன்பிறப்புகள் இணையத்தில் பகிர்ந்தும், நெகிழ்ந்தும் வருகிறார்கள்..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications